குற்றாலம், குற்றாலநாதர் கோயிலில் கே வி பி வங்கி மூலம் டிராக்டர் வழங்கல்.!
தென்காசி
குற்றாலம், குற்றாலநாதர் கோயிலில் கே வி பி வங்கி மூலம் டிராக்டர் வழங்கல்
தென்காசி டிச 19
தென்காசி மாவட்டம், குற்றாலம்,அருள்மிகு திருக்குற்றாலநாத சுவாமி திருக் கோயிலுக்கு தென்காசி கரூர் வைசியா வங்கியின் மூலம் இன்று டிராக்டர் ஒன்று உபயமாக வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது.

டிராக்டரினை திருக்கோயிலின் உதவி ஆணையர் ஆறுமுகத்திடம் திருநெல்வேலி கரூர் வைசியா வங்கி மண்டல மேலாளர் செந்தில்குமரன் மற்றும் தென்காசி கிளை மேலாளர் சண்முகசுந்தர், உதவி மேலாளர் மகேஷ் , ஆகியோர் வழங்கினர்.
இந் நிகழ்ச்சிக்கு அறங்காவலர் குழு தலைவர் சக்தி முருகேசன் , அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ஸ்ரீதர்,ராமலெட்சுமி , சுந்தரராஜ் , வீரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் திருக்கோயில் பணியாளர்கள் ஊழியர்கள் பொது மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
AGM கணேசன்
