நீலகிரி, கோவை மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு. !

வானிலை

நீலகிரி,  கோவை மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு. !

தமிழகத்தில் நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்துக்கு சென்னை வானிலை ஆய்வுமையம் கனமழை எச்சரிக்கை கொடுத்துள்ளது.

தமிழகத்தில் வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. நேற்று தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வெப்பம் 2 - 5° செல்சியஸ் வரை உயர்ந்துள்ளது.

இந்தநிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (ஜூலை 11) வெளியிட்ட அறிவிப்பில், "மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 11-07-2025 மற்றும் 12-07-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

13-07-2025 மற்றும் 14-07-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

15-07-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

16-07-2025 மற்றும் 17-07-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது" என்று கூறியுள்ளது.