சூளகிரி அதியமான் வேளாண்மைக் கல்லூரி மாணவ மாணவிகள்  சார்பில் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பாக சிறப்பு முகாம் .!

கிருஷ்ணகிரி

சூளகிரி அதியமான் வேளாண்மைக் கல்லூரி மாணவ மாணவிகள்  சார்பில் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பாக சிறப்பு முகாம் .!

சூளகிரி அதியமான் வேளாண்மைக் கல்லூரி மாணவ மாணவிகள்  சார்பில் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பாக சிறப்பு முகாம் நடைபெற்றது.

 கிருட்டினகிரி மாவட்டம், சூளகிரி அருகே அத்திமுகம் கிராமத்தில் அமைந்துள்ள அதியமான் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சியின் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக, அத்திமுகம் கிராமத்தில் ஏழு நாட்கள் சிறப்பு முகாம் நடைபெற்றது. 

இளங்கலை வேளாண்மைப் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்கள் வருடா வருடம் இம்முகாமை வெவ்வேறு கிராமத்தில் மேற்கொண்டு வருகின்றனர். இவ்வருடம் அத்திமுகம் கிராமத்தில் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டது. 
        
துவக்கவிழாவானது கல்லூரி முதல்வர் முனைவர்  சாந்தி மற்றும் கல்லூரி ஒருங்கிணைப்பாளர் குப்புசாமி அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மஞ்சுநாத் அவர்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தார். இம்முகாமில் மாணவ மாணவியர்கள் பங்குபெற்று பல்வேறு செயல்களில் ஈடுபட்டனர்.

 அத்திமுகம் கிராமத்தில் உள்ள ஐராவதேசவரர் ஆலயத்தில் தூய்மைப்பணி, ஆரோக்கியத்தின் பாதை - யோகா, குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் பற்றி "நலம் தரும் சத்து, வளம் தரும் குழந்தை", குழந்தைத் திருமணத் தடுப்பு, இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம், கழிவு சுத்தம் போன்ற தலைப்புகளில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு, புகையிலை ஒழிப்பு பேரணி, அத்திமுகம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பரிசு வழங்குதல்,  மரம் நடும் விழா, மருத்துவ முகாம் (நோயற்ற வாழ்வே குறைவற்றச் செல்வம்), மண் மற்றும் பாசன நீர் மாதிரி சேகரிப்பு, கால்நடை மருத்துவ முகாம்  கார்கில் வெற்றி தின நினைவு நாள் போன்ற நிகழ்வுகள் வெகுச் சிறப்பாக நடைபெற்றது. 

இம்முகாமின் நிறைவுவிழாவில் சிறப்பு விருந்தினராக திரு. ராமமூர்த்தி, சூளகிரி துணை மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களும், கல்லூரி முதல்வர் முனைவர் அர. சாந்தி, கல்லூரி ஒருங்கிணைப்பாளர்  குப்புசாமி மற்றும் அனைத்து பேராசிரியர்களும் கலந்துக்கொண்டுச் சிறப்பித்தனர்.

செய்தியாளர்

மாருதி மனோ