அன்புச் சோலை திட்டத்தினை கானொளி காட்சி வாயிலாக திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். !
கிருஷ்ணகிரி
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி மாவட்டத்திலிருந்து, காணொளிக் காட்சி மூலம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ், மூத்த குடிமக்களின் நல்வாழ்வை உறுதி செய்யும் வகையில், அன்புச் சோலை திட்டத்தினை துவக்கி வைத்தார்.
அதனைத்தொடர்ந்து, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி, தர்கா அருகில் உள்ள நகர்புற வாழ்வாதார இயக்க கட்டிடத்தில், ஆராதனா தொண்டு நிறுவனத்தின் மூலம் நடத்தப்பட உள்ள அன்புச்சோலை மையத்தினை, மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., அவர்கள், ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ், ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து, முதியோர்களுக்கு சால்வை அணிவித்து, பரிசுப் பொருட்களை வழங்கினர்.
உடன், ஒசூர் சார் ஆட்சியர் திருமதி ஆக்ரிதி சேத்தி, இ.ஆ.ப., ஒசூர் மாநகராட்சி துணை மேயர் ஆனந்தைய்யா, மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி சக்தி சுபாஷினி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
