தமிழக அரசின் 9 புதிய பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்த அமைச்சர் அர.சக்கரபாணி. !
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து கிராமப்புற மக்கள் பயன்பெறும் வகையில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கு தமிழக அரசின் 9 புதிய அரசு பேருந்துகளை தமிழக உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
கிருஷ்ணகிரி பேருந்து நிலையத்தில் இருந்து வேப்பனஹள்ளி, திருப்பத்தூர், ஆம்பள்ளி, மத்தூர், ஜெகதேவி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு பேருந்து வசதி ஏற்படுத்தி கொடுக்கப்படவேண்டும் என்று கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
பொது மக்களின் கோரிக்கையை நிறை வேற்றிடும் வகையில் தமிழக அரசு உத்தரவின்படி புதிய பேருந்துக்கள் துவக்க விழா நடைபெற்றது.
கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்த விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் தலைமை வகித்தார். பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன், நகர்மன்றத் தலைவர் பரிதா நவாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக தமிழக உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி கலந்துக்கொண்டு வேப்பனஹள்ளி, திருப்பத்தூர், ஆம்பள்ளி, மத்தூர், ஜெகதேவி, போச்சம்பள்ளி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு மகளிர் விடியல் பயணத் திட்டத்தின் கீழ் 9 புதிய பேருந்துக்களை புதிய வழித்தடங்களுக்கு கொடியசைத்து துவக்கி வைத்ததை அடுத்து அந்த கிராமங்களுக்கு புதிய பேருந்துகள் புறப்பட்டு சென்றது.
இதனையடுத்து பல ஆண்டு கால கோரிக்கையை தமிழக அரசு நிறைவேறியதற்கு அப்பகுதி கிராம மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
மேலும் இந்த விழாவில் நகர திமுக செயலாளர்களான அஸ்லாம்,
வேல் மணி, மாவட்ட துணைச் செயலாளர் சாவித்திரி, திருமதி புஸ்பா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ