மேக்கரையில் ஹோட்டல் ஸ்பைஸ் வில்லேஜ் திறப்பு விழா .!
கிருஷ்ணகிரி

மேக்கரையில் ஹோட்டல் ஸ்பைஸ் வில்லேஜ் திறப்பு விழா
வடகரை பஞ்சாயத்து தலைவர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்
தென்காசி செப் 09
தென்காசி மாவட்டம், பண்பொழி அருகே உள்ள மேக்கரையில் ஹோட்டல் ஸ்பைஸ் வில்லேஜ் திறப்பு விழா நிகழ்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. இந் நிகழ்ச்சிக்கு வடகரை பஞ்சாயத்து தலைவர் சேக் தாவூது தலைமை வகித்து ரிப்பன் வெட்டி புதிய ஹோட்டலை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்.
நெல்லை மருத்துவர் செய்யது இப்ராஹிம் வருகை தந்த அனைவரையும் வரவேற்று பேசினார். இந்நிகழ்ச்சியில் மீரான் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் மருத்துவர் அப்துல் அஜீஸ்,மருத்துவர் பைசல், ஜனாப் செய்யது அகமது, மேக்கரை பள்ளி இமாம், குத்துக்கல் வலசை ஆக்ஸ்போர்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் திருமலை, பொறியாளர் முத்துராஜ், ஆக்ஸ்போர்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் அன்பரசிதிருமலை, ராயல் மருத்துவமனை பிஆர்ஓ நெல்லை மோகன், நஸ்ருதீன், மேலாளர் அப்துல்லா, ஜனாப் ஜாபர், காசி, ஏ டூ இசட் அப்துல் காதர், கடையநல்லூர் நயினார் முகம்மது, செய்யது அப்துல்காதர், சுத்தமல்லி ராஜா, மேக்கரை அம்யூஸ்மென்ட் பார்க் ஊழியர்கள், மேற்பார்வையாளர் பிரதாப்,மற்றும் ஊர் தலைவர்கள், நிர்வாகிகள், பண்பொழி, வடகரை, அச்சன்புதூர், சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திறப்பு விழா ஏற்பாடுகளை மேலாளர் அப்துல்லா சிறப்பாக செய்திருந்தார்.
முடிவில் மருத்துவர் செய்யது இப்ராஹிம் மற்றும் செய்யது அஹமது ஆகியோர் நன்றி கூறினர்.
செய்தியாளர்
AGM கணேசன்