வீட்டின் மீது புளியமரம் விழுந்ததில் மூன்று பெண்கள் காயம்  பாதிக்கப்பட்டவர்களை நகர்மன்ற தலைவி பரிதா நவாப் நேரில் பார்வையிட்டு நிதி உதவி அளித்தார்.!

கிருஷ்ணகிரி

வீட்டின் மீது புளியமரம் விழுந்ததில் மூன்று பெண்கள் காயம்  பாதிக்கப்பட்டவர்களை நகர்மன்ற தலைவி பரிதா நவாப் நேரில் பார்வையிட்டு நிதி உதவி அளித்தார்.!

கிருஷ்ணகிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள வீட்டின் மீது 200 ஆண்டு பழமை வாய்ந்த புளியமரம் விழுந்ததில் மூன்று பெண்கள் காயம்  பாதிக்கப்பட்டவர்களை நகர்மன்ற தலைவி பரிதா நவாப் நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு மருத்துவ செலவுக்காக நிவாரணம் வழங்கி மாற்று இடம் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று குறிப்பிட்டார்.

கிருஷ்ணகிரி சையது பாஷா மலை அடிவாரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இந்த குடியிருப்பில் சுமார் 200 ஆண்டுகள் பழமையான பெரிய புளிய மரம் உள்ளது.

ந்இந்த புளிய மரம்  இரவு 12 மணி அளவில் ஆட்டோ  ஓட்டுனர்களான சாதிக் மற்றும் சதாம் ஆகியோரின் வீடுகள் மீது ஒடிந்து விழுந்ததில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த சாதிக் என்பவரின் மனைவி மற்றும் இரண்டு பெண் பிள்ளைகளுக்கு தலையில் காயம் ஏற்பட்டு, உடனடியாக அக்கம் பக்கத்தினர் காயம் அடைந்தவர்களை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த நகர்மன்ற தலைவர் திருமதி பரிதா நவாப் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறியதோடு மருத்துவ செலவிற்கு முதல் கட்டமாக நிவாரணம் வழங்கினர்.

இதுகுறித்து பேசிய நகர்மன்ற தலைவர் திருமதி பரிதா நவாப்.... கிருஷ்ணகிரி 1வது வார்டு பகுதியில் உள்ள மலை அடிவாரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நிலமற்ற ஏழை எளிய மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் குடியிருப்பு பகுதியில் உள்ள பழமையான புளிய மரம் நள்ளிரவில் முறிந்து விழுந்ததில் மூன்று பெண்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிசிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் இப்பகுதியில் பல மரங்கள் முறிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த மரங்களை அகற்றிட வேண்டியும், எந்த ஒரு பாதுகாப்புகளும் இன்றி குடியிருந்து வரும் இவர்களுக்கு இதுவரை பட்டா இல்லை.

ஆகையால் இவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாவுடன் வேறு இடம் வழங்கிட மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது, ஆட்சியரும் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டார்.

செய்தியாளர்

மாருதி மனோ