கிருஷ்ணகிரி விஜய் இன்ஸ்டிட்யூட்டில் நடைபெற்ற ஆசிரியர் தின விழா .!

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி விஜய் இன்ஸ்டிட்யூட்டில் நடைபெற்ற ஆசிரியர் தின விழா .!

கிருஷ்ணகிரி விஜய் இன்ஸ்டிட்யூட்டில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் துரை என்கிற துரைசாமி, முன்னாள் ஜனாதிபதி டாக்டர் இராதாகிருஷ்ணனின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கினார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளினை முன்னிட்டு ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரியில் அமைந்துள்ள விஜய் இன்ஸ்டிட்யூட்டில் ஆசிரியர் தின விழா நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்துகொண்ட விஜய் இன்ஸ்டிட்யூட்டின் நிறுவனரும், 
முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினருமான துரை என்கிற துரைசாமி அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்களது  திருஉருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


 
பின்னர்  நடைபெற்ற ஆசிரியர் தினவிழாவில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து, ஆசிரியராக பணியாற்றி, இந்திய நாட்டின் மிக உயர்ந்த பதவியான  ஜனாதிபதியாக உயர்ந்த, சர்வபள்ளி டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளினை ஆசிரியர் தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதை நாம் ஆசிரியர் தினமாகக் கொண்டாடி  வருகிறோம் என்பதை மாணவிகளான நீங்கள் நன்கு உணர்ந்து படித்தால், டாக்டர் இராதாகிருஷ்ணன் போல மிகவும் உயர்ந்த இடத்திற்கு செல்ல முடியும் என்று துரை என்ற துரைசாமி குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து இன்ஸ்டிட்யூட்டில் படிக்கும் நர்சிங் மாணவிகள் கேக் வெட்டி கொண்டாடியதோடு ஆசிரியர்களுக்கு இனிப்புகள் வழங்கி தங்களது ஆசிரியர் தின வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர். மேலும் இந்த விழா ஏன்பாடுகளை ஆசிரியர்களான உமேராபேகம், நகியா ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தனர்கள்,

இவ்விழாவில் ஜெனீவி, கிருத்திகா, காவியா உள்ளிட்ட பலர் இந்த விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.