ரூ 3 லட்சம் மதிப்பிலான தங்க நகை திமுக மாவட்ட பிரதிநிதி செல்வம் மூலமாக உரிய நபரிடம் ஒப்படைக்கப் பட்டது .!
தென்காசி

தென்காசியில் ரூ 3 லட்சம் மதிப்பிலான தங்க நகை திமுக மாவட்ட பிரதிநிதி செல்வம் மூலமாக உரிய நபரிடம் ஒப்படைக்கப் பட்டது
நகையினை பெற்றுக் கொண்ட முருகன் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்
தென்காசி செப் 05
தென்காசி மாவட்டம், வல்லம் பகுதியைச் சேர்ந்த ஆர் கே செல்வம் என்பவர் ஆர்.கே.எஸ் புரூட்ஸ் என்ற பெயரில் பழங்கள் மொத்த வியாபாரம் செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார்.
மேலும் இவர் திமுக வல்லம் கிளை செயலாளராகவும், திமுக மாவட்ட பிரதிநிதியாகவும் செயல்பட்டு வருகிறார். தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் உள்ள ஆம்னி பேருந்து நிறுத்தம் அருகே ரம்டான் பழங்கள் மொத்த வியாபாரத்திற்காக ஏற்றி வர செல்லும் போது 30 கிராம் எடை கொண்ட ரூபாய் 3 லட்சம் மதிப்பிலான தங்க நகையான கைச்செயினை கண்டெடுத்து அதனை தென்காசி காவல் நிலையத்தை அணுகி காவல் ஆய்வாளர் ராபர்ட் ஜெயின் முன்னிலையில் காவல் உதவி ஆய்வாளர் முருகேஸ்வரிடம் ஒப்படைத்தார்.
மேற்படி செயினை தென்காசி மாவட்டம், மத்தளம்பாறை சந்தன மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பிச்சாண்டி மகன் முருகன் என்பவர் தனது செயினுக்கு உரிய அடையாளங்கள் கூறி தென்காசி காவல் நிலையத்தில் வைத்து இன்று மாலை காவல் ஆய்வாளர் ராபர்ட் ஜெயின் முன்னிலையில் வல்லத்தை சேர்ந்த திமுக மாவட்ட பிரதிநிதி ஆர் கே செல்வம் மூலமாக பெற்றுக் கொண்டார். நகையினை பெற்றுக் கொண்ட முருகன் கண்ணீர் மல்க நகையினை கண்டெடுத்த திமுக மாவட்ட பிரதிநிதி ஆர் கே செல்வத்திற்கும், காவல் ஆய்வாளர் ராபட் ஜெயின், மற்றும் உதவி ஆய்வாளர், காவலர்கள் ஆகியோருக்கு நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.
செய்தியாளர்
AGM கணேசன்