வாணிஒட்டு அணைத் திட்டத்தினை மீண்டும் செயல்படுத்திட வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம். !

கிருஷ்ணகிரி

வாணிஒட்டு அணைத் திட்டத்தினை மீண்டும் செயல்படுத்திட வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம். !

கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான வாணிஒட்டு அணைத் திட்டத்தினை மீண்டும் செயல்படுத்திட வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தினை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான வாணிஒட்டு அணைத்திட்டத்தினை மீண்டும் செயப்படுத்திட வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தினை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்,

தமிழக விவசாயிகள் சங்கத்தின் ஆலோசகர் கண்ணையன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கண்டன ஆர்ப்பாட்டததில் மாவட்ட பொதுச் செயலாளர் அனுமந்த்ராஜ், மாவட்ட தலைவர் வேலு, மாவட்ட துணைத் தலைவர் வரதராஜ், மாவட்ட செயலாளர் சத்திவேல், ஒன்றிய செயலாளர் தேவராஜ், மாவட்ட துணைச் செயலாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் இந்த முற்றுகைப் போராட்டத்திற்கு தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் இராம கவுண்டர் 
கலந்துகொண்டு கோரிக்கைகள் வலியுறுத்தி கண்டன ஊரை ஆற்றினர்,

மேலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது கடந்த 2018 ல்
எண்னேக்கொள் புதூர் கால்வாய் திட்டத்தில், நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு இன்னும் இழப்பீடு வழங்காமல் உள்ளது, ஆகையால் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய இழப்பீடு தொகையை இன்றைய சந்தை மதிப்பீட்டில் கணக்கிட்டு நாங்கு மடங்காக உயர்த்தி வழங்க வேண்டும்,

கடந்த ஆறு ஆண்டுகளாக தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கும்
கே. ஆர்.பி. அணையின் இடது புறக் கால்வாயை சந்தூர் வரை தூர்வாரி தண்ணீர் விட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்,

அழியாளம் அணை திட்டத்தினை 200 அடிக்கு உயர்த்தி 20 அடி அகலத்தில் கால்வாய்களை அகலப்படுத்தும் போது பாதிக்கட்டும் வீடு, ஆழ்துளை கிணறு, தென்னை, மாமரம், உள்ளிட்ட பூச்செடிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும்,

பெனுக்கொண்டாபுரம் ஏரியில் இருந்து ரெட்டிபட்டி எரி வரை உள்ள 38 ஏரிகளுக்கு தண்ணிர் கொண்டு செல்ல புதிய கால்வாய் வெட்டுப் பணிகளை தீவிரப்படுத்திட வேண்டும், விவசாயிகளிடம் இருந்து கையகப்படுத்திய விவசாய நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்
கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகளின் கனவு திட்டமான வாணிஒட்டு அணைத் திட்டத்தினை மீண்டும் செயல்படுத்திட வேண்டும். 

இல்லையில் கே. ஆர்.பி. அணையின் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தின் முன்பாக மீண்டும் ஒட்டு மொத்த விவசாயிகளும் ஒன்றிணைந்து மிகப்பெரிய போராட்டத்தினை நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாக மாநில தலைவர் இராம கவுண்டர் குறிப்பிட்டார்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது  ராஜா, ஆர்மி ராஜன், கோவிந்தராஜ் , தனியரசு, கண்ணையன், ராஜீவ் காந்தி, முனிரத்தினம், செல்வராஜ், சரவணகுமார், பழனிச்சாமி, திம்மராயன், தெற்கு ஒன்றிய செயலாளர் சின்னசாமி உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்

மாருதி மனோ