குடியிருப்பு பருக் நினைவு தொடக்கப் பள்ளியில் காலை உணவு திட்டத்தினை மேலகரம் பேரூராட்சி சேர்மன் வேணி வீரபாண்டியன் துவக்கி வைத்தார் .!

தென்காசி

குடியிருப்பு பருக் நினைவு தொடக்கப் பள்ளியில் காலை உணவு திட்டத்தினை மேலகரம் பேரூராட்சி சேர்மன் வேணி வீரபாண்டியன் துவக்கி வைத்தார் .!

குடியிருப்பு பருக் நினைவு தொடக்கப் பள்ளியில் காலை உணவு திட்டத்தினை மேலகரம் பேரூராட்சி சேர்மன் வேணி வீரபாண்டியன் துவக்கி வைத்தார்

தென்காசி ஆகஸ்ட் 26


தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை மயிலாப்பூர் புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில் இருந்து தமிழ்நாடு முழுவதும் நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை காணொளி காட்சி வாயிலாக இன்று துவக்கி வைத்ததை தொடர்ந்து,

தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் அறிவுறுத்தலின் பேரில், தென்காசி மாவட்டம், மேலகரம் பேரூராட்சிக்கு உட்பட்ட குடியிருப்பு பரூக் நினைவு தொடக்கப்பள்ளியில் மேலகரம் பேரூராட்சி மன்ற சேர்மன் வேணி வீரபாண்டியன் தலைமை வகித்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு திட்டத்தை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு மேலகரம் பேரூர் திமுக செயலாளர் சுடலை, பேரூராட்சி துணைத்தலைவர் ஜீவானந்தம், உதவிதிட்ட அலுவலர் டேவிட் ஜெபசிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் ஈஸ்வரன், கவுன்சிலர் கபிலன், வார்டு செயலாளர் குத்தாலிங்கம், பள்ளி நிர்வாகி ஷேக் முகமது ரபீக், குற்றாலம் குத்தாலிங்கம், பேரூராட்சி அலுவலர்கள் முப்புடாதி, தங்கராஜ், பள்ளி ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து அரசு உதவி பெறும் நன்னகரம் வெங்கடாசலம் பிரைமரி பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் பேரூராட்சி சேர்மன் வேணி வீரபாண்டியன் காலை உணவு திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

செய்தியாளர்

AGM கணேசன்