100 ரூ, 200 ரூ நோட்டுக்களை ஏடிஎம்ம் களில் வங்கிகள் நிரப்ப வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல். !
ரிசர்வ் வங்கி

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஒரு புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது. ரூ.100, ரூ.200 நோட்டுகள் வைத்திருப்பவர்கள் இதனை அறிந்து கொள்வது அவசியம் ஆகும்.
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஒரு புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது. இனிமேல் அனைத்து வங்கிகளும் ஏடிஎம் இயந்திரங்களில் கட்டாயமாக ரூ.100 மற்றும் ரூ.200 நோட்டுகளை வைத்திருக்க வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த வங்கிகள் எந்த சிறப்பு மாற்றங்களையும் ஏடிஎம்களில் செய்ய வேண்டியதில்லை. ஏற்கனவே பல வங்கிகளின் ஏடிஎம்களில் இந்நோட்டுகளை வைக்கும் வசதி உள்ளது.
கடந்த சில காலமாக சந்தையில் சில்லரை பணம் கிடைக்காத பிரச்சனை மக்கள் மற்றும் கடைக்காரர்களை பாதித்தது. சிறிய பரிவர்த்தனைகளுக்கு சில்லரை இல்லாததால், பலர் "UPI-யை பயன்படுத்துங்கள்" என்று வாடிக்கையாளர்களிடம் சொல்லி வந்தனர். இந்த சிக்கலை சரி செய்வதற்காகவே ஆர்பிஐ இந்த புதிய வழிகாட்டுதலை வழங்கியுள்ளது.
இனி ஏடிஎம்களில் இருந்து 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் எளிதாக கிடைக்கும். ஆர்பிஐயின் உத்தரவு படி, அனைத்து வங்கிகளும் மற்றும் வெள்ளை லேபிள் ஏடிஎம் ஆபரேட்டர்களும் (ஒயிட் லேபிள் ஏடிஎம் ஆபரேட்டர்கள்) தங்கள் ஏடிஎம்-களில் குறைந்தது ஒரு கேசெட் வழியாக 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுகளை வழங்க வேண்டும்..
இது படிப்படியாக நடைமுறைக்கு வரும். செப்டம்பர் 30, 2025க்குள் 75% ஏடிஎம்களில் இந்த நோட்டுகள் கட்டாயமாக வழங்கப்பட வேண்டும். மார்ச் 31, 2026க்குள் 90% ஏடிஎம்களும் இந்த நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
வங்கிகள் புதிய மெஷின் வாங்க தேவையில்லை. ஏற்கனவே இருக்கும் ஏடிஎம்களில் சில சீரமைப்புகள் செய்தாலே போதும். பல ஏடிஎம்-களில் தற்போது காசெட் காலியாகவோ அல்லது கவனக்குறைவாகவோ பணம் இல்லாமல் இருப்பது பிரச்சனையாக உள்ளது. அதனைத் தவிர்க்கும் வகையில் ஆர்பிஐ வலியுறுத்தியுள்ளது.