நாட்டு மாடுகள் வளர்ப்பினை ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்பட உள்ள எருது விடும் விழாவிற்கான ஏற்பாடுகள். !

கிருஷ்ணகிரி

நாட்டு மாடுகள் வளர்ப்பினை ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்பட உள்ள எருது விடும் விழாவிற்கான ஏற்பாடுகள். !

சின்ன மோட்டூர் கிராமத்தில் நாட்டு மாடுகள் வளர்ப்பினை ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்பட உள்ள எருது விடும் விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரம். வெற்றிபெறும் அனைத்து எருதுகளுக்கும் தங்கக் காசுகள் வழங்கப்பட உள்ளது

கிருஷ்ணகிரி  அருகே உள்ள சின்ன மோட்டூர் கிராமத்தில் நாட்டு மாடுகள் வளர்ப்பினை ஊக்கப்படுத்தும் விதமாக  வருகின்ற 28-ம் தேதி மாபெரும் எருது விடும் விழா நடத்தப்படுகிறது.

இந்த விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இது குறித்து எருது விடும் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மீசை அர்சுனன் கூறுகையில் .....

கிருஷ்ணகிரி அடுத்துள்ள சின்ன மோட்டூர் கிராமத்தில் வருகின்ற 28- ம் தேதி மாபெரும் எருது விடும் விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகள் சிறந்த முறையில் நடைபெற்று வருகிறது,

இந்த எருது விடும் விழாவில் நாட்டு மாடுகள் வளர்ப்பினை ஊக்குவிக்கும் விதமாக நடைபெற உள்ள இந்த எருது விடும் விழாவில் கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமின்றி தர்மபுரி, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணா மலை, மட்டுமின்றி அண்டை மாநிலமான ஆந்திரா, கர்நாடகாவில் இருந்தும் ஏராளமான எருதுகள் இவ்விழாவில் கலந்து கொள்ள உள்ளது,

அரசின் வழிக்காட்டுதலின் படி நடத்தப்பட உள்ள இந்த எருது விடும் விழாவில் மொத்தம் 91 பரிசுகள் வழங்கப்பட உள்ளது. 

இதில் முதல்முறையாக வெற்றிபெறும் அனைத்து எருதுகளுக்கும் தங்கக் காசுகள் மட்டுமே பரிசாக வழங்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.
மேலும் முதலாம் ஆண்டு எருது விடும் விழாவில்  அனைவரும் கலந்துக் கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

செய்தியாளர்

மாருதி மனோ