பர்கூரில் அதிமுக சார்பில் முன்னாள் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா நினைவு தினம் கடைபிடிக்கப்பட்து .!
கிருஷ்ணகிரி
பர்கூரில் தமிழக முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா நினைவு நாளினை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு அன்னதானத்தினை முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சி.வி.ராஜேந்திரன் வழங்கினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில் அதிமுக சார்பில் முன்னாள் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா நினைவு தினம் கடைபிடிக்கப்பட்து

இதன் ஒரு பகுதியாக பர்கூர் பேருந்து நிலையம் அருகில்
கிருஷ்ணகிரி வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளரும் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினருமான சி.வி.ராஜேந்திரன் தலைமையில் தமிழக முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களில் 9-ம் ஆண்டு நினைவு தினம் நடைபெற்றது.
இதில் எம்.ஜி.ஆர். திருவுருவச் சிலை முன்பாக அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த முன்னாள் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின் திருவுருவப் படத்திற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சி.வி. ராஜேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்,
பின்னர் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானத்தினையும் சி.வி.ராஜேந்திரன் வழங்கி துவக்கி வைத்தார்.
அப்போது ஒன்றிய அதிமுக செயலாளர் ஜெயபாலன், கோவிந்தராஜ், மாணவரணி செயலாளர் வெற்றி செல்வன், தகவல் தொழில்நுட்ப பரிவு மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், நகர செயலாளர் துரைசாமி,உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்துக் கொண்டு செல்வி ஜெயலலிதா அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.
செய்தியாளர்
மாருதி மனோ
