கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அதிமுக மகளிர் அணி சார்பில் முன்னாள் தமிழக முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதாவின் 9 ஆம் ஆண்டு நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது,!
கிருஷ்ணகிரி
பெத்ததாளப்பள்ளி கிராமத்தில் அதிமுக கிழக்கு மாவட்ட மகளீர் அணி சார்பில் முன்னாள் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் நினைவு நாளினை முன்னிட்டு அவரது திருஉருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அதிமுக மகளிர் அணி சார்பில் முன்னாள் தமிழக முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதாவின் 9 ஆம் ஆண்டு நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது,

இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெத்ததாளப்பள்ளி கிராமத்தில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அதிமுக மகளிர் அணி தலைவர் திருமதி சுகந்தி மாது அவர்களின் தலைமையில் தமிழக முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களில் 9 -ம் ஆண்டு நினைவு தினம் நடைபெற்றது.
பெத்ததாளப்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். திருஉருவச்சிலை முன்பாக அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த முன்னாள் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின் திருவுருவப் படத்திற்கு கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் அசோக் குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மேலும் இந்த நினைவு அஞ்சலி கூட்டத்தின் போது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் திருமதி மனோரஞ்சிதம் நாகராஜன், முனிவெங்கடப்பன், முன்னாள் மாவட்ட செயலாளர் காத்தவராயன், ஒன்றிய செயலாளர்களான சோக்காடி ராஜன், சூரியா பெருமாள், முன்னாள் கூட்டுறவு சங்கத்தலைவர் தாபா வெங்கட்ராமன், கார்த்திக் உள்ளிட்ட ஏராளமானவர்கள் இந்த நினைவேந்தல் நிகழ்சியில் கலந்து கொண்டு செல்வி ஜெயலலிதா அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.
செய்தியாளர்
மாருதி மனோ
