சூளகிரி அருகே திரௌபதியம்மன் கோவிலில் 14 கிராம மக்கள் வழிபாடு .!

கிருஷ்ணகிரி

சூளகிரி அருகே திரௌபதியம்மன் கோவிலில் 14 கிராம மக்கள் வழிபாடு .!

சூளகிரி அருகே திரௌபதியம்மன் கோவிலில் 14 கிராம மக்கள் வழிபாடு: சீர்வரிசையுடன் பங்கேற்ற பெண்கள்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த பந்தர்குட்டை என்னும் கிராமத்தில் 14 ஊர் கிராம மக்கள் சார்பாக  திரௌபதியம்மன் கோவில் அமைக்கப்பட்டுள்ளது.

அமாவாசை, பௌர்ணமி உள்ளிட்ட நாட்களில் ஒவ்வொரு கிராம மக்கள் சார்பில் விஷேச பூஜைகள் நடத்தி அன்னதானம் வழங்குவது வழக்கம் என்கிற நிலையில் முருக்கம்பட்டி கிராம மக்கள் சார்பில் நூற்றுக்கும் அதிகமான பெண்கள் தலையில் சீர் சுமந்தப்படி தப்பாட்ட இசையுடன் கோவிலுக்கு வந்தனர்.

சிறப்பு அழைப்பாளராக அதிமுக ஒன்றிய செயலாளரும், முன்னாள் பஞ்சாயத்து தலைவருமான செல்வம் அவர்கள் பங்கேற்றிருந்தார். பின்னர் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

செய்தியாளர்

மாருதி மனோ