தோட்டக்கலை மேம்பாட்டு இயக்கம் மற்றும் தேசிய தோட்டக்கலை இயக்கம் சார்பாக, 50 சதவிகித மானியம் ரூ.12,50,000 மதிப்பில் பசுமைக்குடில் அமைத்து ஜிப்சோபில்லா மலர் சாகுபடி பணிகள். !
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சி ஒன்றியம், சென்னப்பள்ளி கிராமத்தில் விவசாயி.பசவராஜ் ஒருங்கிணைந்த தோட்டக்கலை மேம்பாட்டு இயக்கம் மற்றும் தேசிய தோட்டக்கலை இயக்கம் சார்பாக, 50 சதவிகித மானியம் ரூ.12,50,000 மதிப்பில் பசுமைக்குடில் அமைத்து ஜிப்சோபில்லா மலர் (Gypsophila Flower) சாகுபடி பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு, நாற்றங்கால் நடவு, மலர் சாகுபடி மற்றும் விற்பனை குறித்து விவசாயிடம் கேட்டறிந்தார்.
உடன் தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் குணவதி, உதவி இயக்குநர் ஜெனிபர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) (பொ) சிவநதி உள்ளிட்ட பலர் உள்ளனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
