ரோட்டரி கிளப் ஆப் குற்றாலம் மெட்ரோ புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா .!
தென்காசி
ரோட்டரி கிளப் ஆப் குற்றாலம் மெட்ரோ புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா
தென்காசி, ஆக 02
ரோட்டரி கிளப் ஆப் குற்றாலம் மெட்ரோவின் 25 ஆம் ஆண்டு புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா தென்காசி ரயில் நிலையம் எதிரில் உள்ள ஸ்ரீ நம்பி கிருஷ்ணா ஹாலில் வைத்து சிறப்பாக நடைபெற்றது.
ரோட்டரி கிளப் குற்றாலம் மெட்ரோவின் 25 ஆம் ஆண்டு புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நடைபெற்றது இந்த விழாவில் தலைவராக என். வெங்கடேஸ்வரன் செயலாளராக வி. முத்துக்குமாரசுவாமி, பொருளாளராக சந்திரதாஸ் ஆகியோர் பதவி ஏற்று கொண்டனர்.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக டாக்டர் விஜயகுமார், டாக்டர் சேக் சலீம் தென்காசி நகராட்சி சேர்மன் ஆர்.சாதிர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக தென்காசி தெற்கு மாவட்ட மதிமுக செயலாளர் இராமஉதயசூரியன் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளை வாழ்த்தி பேசினார்
புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் ரோட்டரி கிளப் ஆப் குற்றாலம், குற்றாலம் சாரல், குற்றாலம் சென்ட்ரல், செங்கோட்டை சென்ட்ரல், கடையநல்லூர், கடையநல்லூர் சென்ட்ரல், பாவூர்சத்திரம் ஆலங்குளம், அம்பாசமுத்திரம், புளியங்குடி, சங்கரன்கோவில், ஆகிய சங்கங்களில் இருந்து நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
இந்த விழாவில் சிறந்த சேவைக்கான விருதை தென்காசி நகர மன்ற தலைவர் ஆர்.சாதிர், நகராட்சி சுகாதார ஆய்வாளர் இஸ்மாயில், தென்காசி தலைமை தபால் நிலையம் பெண் ஊழியர் சுப்புலட்சுமி ஆகியோருக்கு வழங்கப்பட்டது. மேலும் தென்காசி நகராட்சி களப்பணியாளர்கள் 25 நபர்களுக்கு மலைகோர்ட் வழங்கப்பட்டது.
முடிவில் செயலாளர் முத்துக்குமாரசாமி நன்றி கூறினார்.
செய்தியாளர்
AGM கணேசன்
