கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் பதவி நியமனம் குறித்து கருத்து கேட்டு கூட்டம்..!

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் பதவி நியமனம் குறித்து கருத்து கேட்டு கூட்டம்..!

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் பதவி நியமனம் குறித்து கருத்து கேட்டு கூட்டம். மேலிட பார்வையாளரும் பெங்களூரு சிவாஜி நகர் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்  ரிஸ்வான் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

அகில இந்திய  காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் விதமாக, அமைப்பு சீரமைப்பு இயக்கம் என்ற பெயரில், நாடு முழுவதிலும் பொறுப்பாளர்களை நியமித்து அதன் வாயிலாக தொண்டர்களின் கருத்தை கேட்டு, புதிய நிர்வாகிகளை  (மாவட்டத் தலைவர்கள்) நியமிப்பதற்கான நடவடிக்கைகளை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் அனைத்து மாவட்டங்களுக்கும் கருத்து கேட்கும் பணிக்கு பொறுப்பாளர்களை நியமித்து அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.

அதன்படி, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் மேலிட பார்வையாளராக கர்நாடக மாநிலம், பெங்களூரு, சிவாஜி நகர் தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ரிஸ்வான் அர்ஷத்  நியமிக்கப்பட்டுள்ளார். 
இந்த நிலையில், அவர் பர்கூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை சந்தித்து கருத்து கேட்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். 

இவருடன் கோவை மாநகராட்சி மாமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளருமான சரவணக்குமார், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் வசந்தராஜ் ஆகியோர் தலையிலான குழுவினர்கள் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்திட திறமையான மாவட்டத் தலைவரை தேர்வு செய்வதற்கான பணிகளில் ஈடுப்பட்டனர். அப்போது காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து தகுதியான மாவட்டத் தலைவர்கள் குறித்து கேட்டறிந்தனர்.

பின்னர் சிறப்புரை ஆற்றிய மேலிட பார்வையாளர் ரிஸ்வான் அர்ஷத்  காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் நோக்கத்தில், கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தலைவராக நியமிப்பது குறித்து கட்சியினரிடம் கருத்து கேட்பதற்காக பர்கூர் தொகுதியில் நடைபெற்றுள்ள நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஒவ்வொருவரிடமும் கருத்துக்களை கேட்டு வருகிறோம். 

இந்த மாவட்டத்திற்கு உட்பட்ட கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் கூட்டங்கள் நடத்தப்பட்டு கருத்துக்கள் கேட்டு அதன் மீதான அறிக்கை தயாரித்து ஒரு வாரத்திற்குள் கட்சியின் தலைமைக்கு அனுப்ப இருக்கிறோம். 

தொடர்ந்து புதுதில்லியில் நடைபெற உள்ள பொறுப்பாளர்களின் கூட்டத்தில் அந்தந்த மாவட்டங்களில் உள்ள அரசியல் நிலவரம் மற்றும் கட்சியின் வளர்ச்சி குறித்து விரிவாக எடுத்துரைக்கப்படும். 

இதன் பின்னர் சுமார் 15 நாட்களுக்கு பிறகு காங்கிரஸ் கட்சியின் தலைமை மாவட்ட தலைவர்கள் நியமனம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என அவர் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட திட்டகுழு உறுப்பினர் ரகு, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவரும் பொதுக்குழு உறுப்பினருமான எல் சுப்பிரமணியன், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட துணைத் தலைவர் பி.சி.சேகர்,முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் துரை என்ற துரைசாமி, மாநில பொதுச் செயலாளர் ஊத்தங்கரை ஆறுமுகம், முன்னாள் எஸ். சி.எஸ்.டி.பிரிவு மாநில அமைப்பாளர் ஆறுமுக சுப்பிரமணி, முன்னாள் மாவட்ட தலைவர் நாராயணமூர்த்தி உள்ளிட்ட பர்கூர் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ