அரசு மேல்நிலைப் பள்ளியில் சரக அளவிலான கைப்பந்து போட்டி துவக்க விழா !
கிருஷ்ணகிரி

மோரனஅள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் சரக அளவிலான கைப்பந்து போட்டி துவக்க விழா !
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணம் ஒன்றியம், மோரன அள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று 23.07.2025 புதன்கிழமை காலை 9.30 மணியளவில் "சரக அளவிலான கைப்பந்துப் போட்டி " துவக்க விழா நிகழ்ச்சி நடைப்பெற்றது. முன்னதாக தமிழ்த்தாய் வாழ்த்துடன் குத்து விளக்கேற்றி நிகழ்ச்சி துவக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் மா. சிவசங்கர் அவர்கள் தலைமை தாங்கி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். உதவி தலைமை ஆசிரியர் காளியப்பன் வரவேற்புரையாற்றினார். பிடிஏ தலைவர் கனகராஜ், பொருளாளர் ஜோதிமணி, ப.மே.கு. தலைவர் சாலி நாராயணன், வார்டு உறுப்பினர் கணக்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மு. ஊ.மன்ற தலைவர் எஸ். ராஜன், மு.ப. மே குழு தலைவர் சங்கீதா ரகுதேவராஜ், பழனி,சக்திவேல் , உடற்கல்வி இயக்குநர் மாதேஷ், சரக இணை செயலாளர் ஜலேந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக "உலகஅமைதி, ஒற்றுமை, ஒருமைப்பாடு, சமுதாய நல்லிணக்கம் ,ஆகியவற்றின் அடையாளமாக "சமாதானப் புறாக்கள் " மாணவர்கள் முன்னிலையில் பறக்கவிடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மோரன அள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி, காவேரிப்பட்டிணம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, , நேஷனல் மெட்ரிக் பள்ளி, அசோக்மிஷன் மெட்ரிக் பள்ளி, கோபிகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி, உள்ளிட்ட பள்ளியின் மாணவர்கள் போட்டியில் கலந்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியை உடற்கல்வி ஆசிரியர்கள் பாலாஜி, தேவப்பிரியா ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். ஆசிரியர்கள் குணசேகரன், தனலெட்சுமி, விமலன், செந்தில்குமார்,இளவரசு, ஜாய்ஸ், சித்ரா. ஜெயந்தி, விஜயபாரதி, மாயவன் ஆகியோர் ஒருங்கினைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் ஆனந்தன், அன்பரசு, தெய்வம், சுகன்யா, திருவேங்கடம், புவனேஸ்வரி, மணிவண்ணன், காயத்திரி, ரெமோலினா மேரி, சேகர், கலைவாணி, மையிலரசி, அமுதா, வெங்கடேஷ், ஜனனி, மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் பிரபு, அனிதாமகேஷ், தமிழரசு உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். இறுதியில் உதவி தலைமை ஆசிரியை சித்ரா நன்றியுரையாற்றினார்.
இறுதியில் தேசிய கீதத்துடன் நிகழ்ச்சி நிறைவுபெற்றது.
செய்தியாளர்
மாருதி மனோ