கிருஷ்ணகிரி சார்பில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி.!
கிருஷ்ணகிரி
இந்திய அரசு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகதின் கீழ் இயங்கும் மை பாரத் கேந்திரா, கிருஷ்ணகிரி சார்பில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டியானது 12.11.2025 இன்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், கிருஷ்ணகிரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அலுவலர் R. நடராஜ முருகன் தலைமை வகித்தார். கிருஷ்ணகிரி மாவட்ட மை பாரத் கேந்திராவின் துணை இயக்குநர் J.ட்ரவீன் சார்லஸ்டன் நிகழ்ச்சியின் நோக்கம் குறித்து விளக்கினார்.

இந்த நிகழ்ச்சியானது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நான்கு ஒன்றியங்களில் பெண்களுக்கான கயிறு இழுக்கும் ( Tug of War) போட்டியும், சிலம்பம் மற்றும் 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் தனிநபர் போட்டியும், ஆண்களுக்கான வாலிபால் குழு(Volley Ball) போட்டியும், சிலம்பம் மற்றும் 200 மீட்டர் ஓட்டப்பந்தயம் தனிநபர் போட்டியும் நடத்தப்பட்டு அதில் குழு போட்டியில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்தவர்களுக்கும், தனிநபர் போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கும் இன்று இந்த மாவட்ட அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கலை கல்லூரி முதல்வர் டாக்டர். தனபால், ஜெகதேவி துரை மாடல் ஸ்கூல், முதல்வர் ரவீந்தர், மற்றும் ஓய்வு பெற்ற மை பாரத் கேந்திராவின் உதவி அலுவலர் அப்துல் காதர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி சிறப்பித்தனர்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் மில்லட் முருகன் சிங்காரவேல் கனினி மையம், மில்லட் முருகன் தேவசமுத்திரம், கம்பர் இளைஞர் நற்பணி மன்ற செயலாளர் ஸ்ரீரங்கன், R.பாலாஜி, தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் இளைஞர் நற்பணி மன்ற தலைவர் பாலாஜி, காவேரிப்பட்டினம் இந்தியன் விளையாட்டு குழு இளைஞர் நற்பணி மன்ற மணியரசன், மற்றும் கிருஷ்ணகிரி மை பாரத் கேந்திராவின் தேசிய இளைஞர் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
இறுதியாக அஸ்வக் பாஷா தேசிய இளைஞர் தொண்டர் நன்றியுரை ஆற்றினார்.
செய்தியாளர்
மாருதி மனோ
