கிருஷ்ணகிரி அருகே உள்ள வெண்ணம்பள்ளி அரசு உயர் நிலைப்பள்ளியில் நடைபெற்ற முப்பெரும் விழா .!

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அருகே உள்ள வெண்ணம்பள்ளி அரசு உயர் நிலைப்பள்ளியில் நடைபெற்ற முப்பெரும் விழா .!

கிருஷ்ணகிரி அருகே உள்ள வெண்ணம்பள்ளி அரசு உயர் நிலைப்பள்ளியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் பி.சி.சேகர் கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ந்து 100 சதவிதம் தேர்ச்சி பெறக்காரணமாக இருந்த பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின் பணியைப் பாராட்டி வெள்ளி காசு மற்றும் நினைவு பரிசுகளை வழங்கிப் பாராட்டினர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வெண்ணம்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில்  கடந்த 15 ஆண்டுகளாக 100 சதவிதம் தேர்ச்சி பெறக் காரணமாக இருந்த ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா, பள்ளியில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு ஊக்க தொகை வழங்கும் விழா மற்றும் சுதந்திர தின விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.

பள்ளியின் தலைமை ஆசிரியர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவரும் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவருமான பி.சி. சேகர் கலந்துகொண்டு மகாத்மா காந்தியின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து இப்பள்ளி கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ந்து 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் நூறு சதவிதம் தேர்ச்சிப்பெறக் காரணமாக இருந்த பள்ளி தலைமை ஆசிரியர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடு வெள்ளி காசுகளையும் வழங்கி பாராட்டினார்,

தொடர்ந்து இப்பள்ளியில் கடந்த ஆண்டு 10-ம் வகுப்பு அரசுப் பொது தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ, மாணவிகளையும் பாராட்டி ஊக்க பரிசினையும் வழங்கி அழியா செல்வமான கல்விச் செல்வத்தினை பெற படிக்கின்ற வயதில் கல்வியை ஆக்கப்பூர்வமாக படித்தால் வாழ்நாள் முழுவதும் செல்வ செழிப்புடன் வாழலாம் என்று குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளின் வண்ணமிகு கலை நிகழ்ச்சிகளும், மாறுவேடப் போட்டிகள், பேச்சிப் போட்டிகளும் நடைபெற்றது. இப்போட்டிகளிலும் வெற்றிப் பெற்ற அனைவருக்கும் பள்ளியின் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது.

மேலும் இந்த விழாவின் போது முன்னாள் சேர்மன் இராஜேந்திரன், பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் திருமதி திம்மி, முன்னாள் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர்கள் பாலகிருஷ்ணன், ஊராட்சி துவக்கப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் முருகேசன், கௌரவத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் உதவி தொடக்க கல்வி அலுவலர் கிருஷ்ணன், சூரன் குட்டை மணி, கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்,

மேலும் இவ்விழாவில் பள்ளியின் ஆசிரியர்களான திருமதி அமலா ஆரோக்கியமேரி, சகாய ஆரோக்கியராஜ் சதீஷ், முவராஜ், சிவகுமார், திருமதி சுபாஷினி, தனஞ்செயன், டேவிட் ஆல்பர்ட் உள்ளிட்ட பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களும் கலந்துக் கொண்டனர்.

மாருதி மனோ