ஆலங்குளத்தில் டி என் பி எஸ் சி குரூப் 4 இலவச மாதிரி தேர்வு .!
தென்காசி

ஆலங்குளத்தில் டி என் பி எஸ் சி குரூப் 4 இலவச மாதிரி தேர்வு
வெற்றி பெற்றவர்களுக்கு சிவ பத்மநாதன் பரிசுகள் வழங்கினார்
தென்காசி ஜூலை 5
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அரசு பொது நூலகம் மற்றும் ஜிகே ஐஏஎஸ் அகாடமி இணைந்து நடத்தும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு நடத்தி தேர்வில் முதல் 10 மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு வாசகர் வட்ட தலைவர் முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் கே எஸ் தங்க செல்வம் தலைமை தாங்கினார்.வட்டார வளர்ச்சி கல்வி ஒருங்கிணைப்பாளர் கே குமார் முன்னிலை வகித்தார்.
ஆலங்குளம் நூலக நூலகர் அ .பழனி ஈஸ்வரன் வரவேற்றுப் பேசினார் மாவட்ட பதிவாளர் அலுவலக உதவியாளர் ஜான் டேவிட் வாழ்த்துரை வழங்கினார்
தென்காசி தெற்கு மாவட்ட முன்னாள் செயலாளர் வழக்கறிஞர் சிவ பத்மநாதன் வாழ்த்துரை வழங்கி தேர்வு செய்யப்பட்ட 10 மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட முன்னாள் பொறுப்பு குழு உறுப்பினர் மேகநாதன் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணைஅமைப்பாளர் மாஸ்டர் கணேஷ் ஒன்றிய கவுன்சிலர்கள் அந்தோணிசாமி தர்மராஜ் ஒன்றிய இளைஞரணி துணைஅமைப்பாளர் ஹரி கிருஷ்ணன் சமூக ஆர்வலர் சோனா மகேஷ் வார்டு செயலாளர் ஜோசப் ஏபி என் குணா, மாவட்ட பிரதிநிதி ஸ்டீபன் சத்திய ராஜ் முல்லை கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.முடிவில் ஜிகே IAS அகாடமி கந்தசாமி நன்றி கூறினார்.
செய்தியாளர்
AGM கணேசன்