தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித்துறை கிருட்டினகிரி மாவட்டம் சார்பாக திருக்குறள் திருப்பணி இருபதாம் நாள் வகுப்பு .!
தென்காசி
தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித்துறை கிருட்டினகிரி மாவட்டம் சார்பாக திருக்குறள் திருப்பணி இருபதாம் நாள் வகுப்பு
கிருஷ்ணகிரி பூந்தோட்டத்தில் உள்ள சிவபாலா நாட்டியாலாயா பள்ளியில் இன்று (14.12.2025) ஞாயிற்றுக்கிழமை திருக்குறளில் திருப்பணிகள் 20 ஆம் நாள் பயிலரங்கம் நடைபெற்றது.


இதில் செல்வி இரா. தனுஸ்ரீ வரவேற்புரை நிகழ்த்த, மதிப்புறு முனைவர் இ.ரவிந்தர் முன்னிலையில், மதிப்புறு முனைவர் ஜெபாலாஜி நிறுவனர் ஸ்ரீனிவாச கல்வி மையம் கிருட்டினகிரி மற்றும் கல்வியாளர் மு.ஸ்ரீரங்கன், பயிலரங்க கண்காணிப்பாளர் மற்றும் மதிப்புறு முனைவர் அ.பன்னிர் செல்வம், குழந்தை நலக்குழுமம் உறுப்பினர் மற்றும் சிவபாலா நாட்டியப்பள்ளி ஆசிரியை சிவபாலாம்பிகேஷ்வரி மற்றும் பாடலாசிரியர் ராணி திருக்குறளை குழந்தைகளுக்கு பயிற்றுவித்தார்.
இறுதியில் குழந்தைகள் திருக்குறள் ஒப்புவித்து வள்ளுவரின் வாய்மையை பெருமிதத்தோடு கற்று மகிழ்ந்தனர். பரிசும் பாராட்டும் பெற்று திருமதி ராணி அவர்கள் நன்றி நவில சிறு தீனி வழங்கி இனிதே பயிலரங்கம் நிறைவுற்றது.
செய்தியாளர்
மாருதி மனோ
