யோகா ஆச்சார்யா பட்டம் பெற்ற வெங்கடேஷன். .!

கிருஷ்ணகிரி

யோகா ஆச்சார்யா பட்டம் பெற்ற வெங்கடேஷன். .!

கிருஷ்ணகிரியில் யோகா ஆசிரியராக பல வருடங்களாக பணியாற்றி வருபவர் யோகா ஆச்சார்யா பட்டம் பெற்ற வெங்கடேஷன். 

இவர் யோகக் கலையை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், யோகா விழிப்புணர்வையும் கூடவே பாரத பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின் விழிப்புணர்வு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவவைகளின் விழிப்புணர்வையும் ஏற்படுத்த  23.07.2025 ம் தேதி காலை 5 மணிக்கு யோகா செய்தபடி கிருஷ்ணகிரியில் தொடங்கினார்.

தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி வழியாக தூத்துக்குடி வரை நடைபயணம் மேற்கொள்ள திட்டமிட்டு இருக்கிறார். 

நடை பயணத்தின்போது இடைபட்ட பல்வேறு இடங்களில் மக்களுக்கு எளிய யோகா பயிற்சிகளை கற்றுத்தரவிருப்பதாக தெரிவித்துள்ளார்.

இவர் மேற்கொள்ளவிருக்கும் சாதனை பயணத்தின் போது இவரை வரவேற்கவும், உற்சாகப்படுத்தவும் இடைபட்ட மாவட்டங்களைச் சேர்ந்த யோகக்கலை ஆர்வலர்கள் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

செய்தியாளர் 

மாருதி மனோ