இலஞ்சியில் ஓணம் டிரிஸ்ஸில் குழும நிறுவனர் பாலகிருஷ்ணன் பிறந்தநாள் விழா.!
தென்காசி
இலஞ்சியில் ஓணம் டிரிஸ்ஸில் குழும நிறுவனர் பாலகிருஷ்ணன் பிறந்தநாள் விழா
நலத்திட்ட உதவிகளை பாலகிருஷ்ணன் வழங்கினார்
தென்காசி நவ 29
தென்காசி அருள்மிகு காசி விஸ்வநாதர் சுவாமிதிருக்கோவில் அறங்காவலர் குழு தலைவரும் ஓணம் டிரிஸ்ஸில் குழுமங்களின் நிறுவனருமான பாலகிருஷ்ணன் பிறந்தநாளை முன்னிட்டு இலஞ்சி டிரஸ்ஸிலில் மஹாலில் வைத்து சுகாதார பணியாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்டவர்களுக்கு அரிசி பை மற்றும் தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் 500க்கும் மேற்பட்டவர்களுக்கு சிறப்பு அன்னதானமும் அறங்காவலர் பாலகிருஷ்ணன் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் டிரிஸ்ஸில் குரூப் கங்காதரன், மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டார்.
செய்தியாளர்
AGM கணேசன்
