ஊத்தங்கரை வடக்கு ஒன்றிய திமுக சார்பில் வாக்கு சாவடி முகவர்கள் ஆய்வு கூட்டம்..!

கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை வடக்கு ஒன்றிய திமுக சார்பில் வாக்கு சாவடி முகவர்கள் ஆய்வு கூட்டம்..!

ஊத்தங்கரை வடக்கு ஒன்றிய திமுக சார்பில் வாக்கு சாவடி முகவர்கள் ஆய்வு கூட்டம்.

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஊத்தங்கரை வடக்கு ஒன்றிய திமுக சார்பில் வாக்குச் சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் ஆய்வு கூட்டம் வடக்கு ஒன்றிய செயலாளர் மூன்றாம்பட்டி எஸ் குமரேசன் தலைமையில் நடைபெற்றது, 

இந்த கூட்டத்தில் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் சேலம் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் எம்,ரமேஷ்  கலந்து கொண்டு ஆலோசனைகள், தேர்தல் சம்பந்தமான  அறிவுரைகளை வழங்கினார்.

இந்த கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய துணை செயலாளர் ஜெயச்சந்திர பாண்டியன், மாவட்ட பொறியாளர் அணி  அமைப்பாளர்  காந்தி, மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் அசோக், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வடக்கு ஒன்றியத்துக்கு  உட்பட்ட வெங்கடதாம்பட்டி , படபள்ளி, கெங்கப்பிராம்பட்டி, உப்பாரப்பட்டி, கதவணி, கருமண்டபதி, கீழ்மத்தூர், எக்கூர்  போன்ற ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளும் இந்த கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் ஒன்றிய துணை செயலாளர் சைலேந்திரி சங்கர், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மோகன், மாவட்ட பிரதிநிதிகள் காமராஜ், பூபதி, இதய நாதன், வடக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பணி ஒருங்கிணைப்பாளர் வேலுசாமி, மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் சிவகுமார், ஒன்றிய நெசவாளர் அணி அமைப்பாளர் சங்கர், கலை இலக்கிய பகுத்தறிவு  ஒன்றிய அமைப்பாளர் அருணகிரி, முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் வெங்கடாசலம், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் ரவிச்சந்திரன், ஒன்றிய தகவல் தொழில் பணித்துணை அமைப்பாளர் திருமலை உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்

மாருதி மனோ