தென்காசியில் கொல்லம் வாராந்திர சிறப்பு ரயிலுக்கு வரவேற்பு .!
தென்காசி
தென்காசியில் கொல்லம் வாராந்திர சிறப்பு ரயிலுக்கு வரவேற்பு
தென்காசி, நவ - 22
தென்காசி ரயில் நிலையத்தில் தென்காசி ரயில் பயணிகள் நலச் சங்கம் சார்பில் கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து தென்காசி மதுரை, திருவண்ணாமலை, திருப்பதி வழியாக மகாராஷ்டிரா மாநிலம் நான்தேத் வரை செல்லும் வாராந்திர சிறப்பு ரயிலுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப் பட்டது.
இந் நிகழ்ச்சிக்கு தென்காசி ரயில் பயணிகள் நலச் சங்க தலைவரும், மதிமுக மாவட்ட அவை தலைவருமான வெங்கடேஸ்வரன் தலைமை வகித்தார்.
கொவ்லம்- நான்தேத் வாராந்திர சிறப்பு
ரயிலை ஓட்டி வந்த ஓட்டுநர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்
பட்டனர். தொடர்ந்து ரயில் பயணிகளுக்கும் பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக அயலக அணி துணை அமைப்பாளர் ராமராஜ், முஸ்லிம் லீக் மாநில செயலாளர் முகம்மது அலி, ரயில் பயணிகள் நலசங்க நிர்வாகிகள் மசூது அலி, முத்துராஜ், முருகன், திருநாவுக்கரசு, முத்தையா, கோமதிசங்கர், கௌதம், உமர்பாரூக், கணேசன், மைதீன், மாணிக்கம், வீரகுமார், மதிமுக பொது குழு உறுப்பினர் ரெங்கசாமி. மதிமுக பேரூர் கழக செயலாளர் இலஞ்சி முருகன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
AGM கணேசன்
