சங்கரன்கோவிலில் பேருந்து வழித்தட சேவைகள் துவக்க விழா .!
தென்காசி
சங்கரன்கோவிலில் பேருந்து வழித்தட சேவைகள் துவக்க விழா
தென்காசி செப் 13
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பேருந்து நிலையத்தில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.ராணி சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா ஆகியோர் முன்னிலையில் சங்கரன்கோவில் புறவழிச்சாலை கல்வெட்டினை திறந்து வைத்து சங்கரன் கோவில் முதல் சுப்புலாபுரம் வரை மற்றும் சங்கரன்கோவில் முதல் புளியங்குடி வரையிலான பேருந்து வழித்தட சேவைகள் மற்றும் புதிய ஆம்புலன்ஸ் சேவைகளை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
சங்கரன் கோவில் வட்டாரம் தோட்டக் கலைத்துறையின் மூலம் வேளாண் இயந்திரமாக்கல் துணை இயக்கம் 2025 – 2026 இன் கீழ் ஒரு விவசாயிக்கு ரூ.80,000/- மதிப்பிலான பவர் வீடர் கருவியினை ரூ. 48,000/- மானியத்தில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் வழங்கினர்.
செய்தியாளர்
AGM கணேசன்
