சுரண்டை நகராட்சி பகுதி பொது மக்களுக்கு சேர்மன் வள்ளி முருகன் அன்பான வேண்டுகோள்.!
தென்காசி
சுரண்டை நகராட்சி பகுதி பொது மக்களுக்கு சேர்மன் வள்ளி முருகன் அன்பான வேண்டுகோள்
கடந்த இரண்டு நாட்களாக தென்காசி மாவட்டம் முழுவதும் நல்ல மழை பெய்து வருகிறது. இன்று திங்கட்கிழமைக்கு ஆரஞ்சு அலார்ட் விடப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
பொது மக்கள் தங்கள் குழந்தைகளை மின் கம்பம் மற்றும் நீர் நிலைகள் அருகில் செல்லாதவாறு கவனமாக பார்த்துக் கொள்ளவும். மின்சாதனங்களை பாதுகாப்பாக உபயோகப்படுத்தவும் காச்சிய குடிநீரை பருகவும் குடும்பத்தில் உள்ள அனைவரும் நிலவேம்பு கசாயம் அருந்தவும், அனுமன் நதிக்கரையில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
செய்தியாளர்
AGM கணேசன்
