கணக்கப்பிள்ளை வலசையில்  ரூ 19 லட்சம் செலவில் பல்நோக்கு கட்டிடம்..!

தென்காசி

கணக்கப்பிள்ளை வலசையில்  ரூ 19 லட்சம் செலவில் பல்நோக்கு கட்டிடம்..!

கணக்கப்பிள்ளை வலசையில்  ரூ 19 லட்சம் செலவில் பல்நோக்கு கட்டிடம்.

கிருஷ்ணமுரளி எம்எல்ஏ திறந்து வைத்தார்.

தென்காசி, ஆக - 25

தென்காசி மாவட்டம், தென்காசி ஊராட்சி ஒன்றியம், கணக்கப் பிள்ளைவலசை ஊராட்சியில் ரூபாய் 19 லட்சம் செலவில் கட்டப்பட்ட பல்நோக்கு கட்டிடத்தை கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ண முரளி (எ) குட்டியப்பா எம்எல்ஏ திறந்து வைத்தார். 

தென்காசி ஊராட்சி ஒன்றியம் கணக்கப்பிள்ளை
வலசை  ஊராட்சி இந்திரா காலனி பகுதியில் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதி மூலம் ரூபாய் 19 லட்சம் செலவில்  கட்டப்பட்ட பல்நோக்கு கட்டிடத்தின் திறப்பு விழா நடைபெற்றது.

இந் நிகழ்ச்சிக்கு கணக்கப் பிள்ளை வலசை ஊராட்சி மன்ற தலைவர் ஈஸ்வரி தலைமை வகித்தார். துணைத் தலைவர் ராமஜெயா முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர்
வேம்பையா சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ண முரளிக்கு ஆள் உயர ரோஜா மாலை அணிவித்து வரவேற்றார்.

இந் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் 
கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா கலந்து கொண்டு பல்நோக்கு கட்டிடத்தை திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றி வைத்து பேசினார். 

இந் நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக துணைச் செயலாளர் பொய்கை மாரியப்பன், தென்காசி மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் வல்லம்  ராமச்சந்திரன், மாவட்ட ஜே பேரவை செயலாளர் ராமசாமி, அதிமுக வர்த்தக அணி அமைப்பாளர் வேம்பு என்ற ரவி,  கணக்கப்பிள்ளை வலசை மாவட்ட பிரதிநிதி பேச்சிமுத்து,  கிருஷ்ணன், ராஜகோபால்,  மாடசாமி, ஆறுமுகச்சாமி, குளத்தூரான், மாடசாமி, மணிகண்டன், கணேசன், சண்முகையா, அழகப்பபுரம் மூர்த்தி, திருவள்ளுவர், வேம்புராஜ், வடகரை சுப்பையா பாண்டியன், முருகையா, மீனாட்சிபுரம் செல்வக் குமாரவேல், மற்றும் 

கணக்கப்பிள்ளை வலசை ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் முகம்மது இஸ்மாயில்,
புன்னைவனம், கணேசன் வளர்மதி, ராஜலட்சுமி, ரமேஷ், சண்முகத்தாய், இசக்கியம்மாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்‌. முடிவில் கணக்கப்பிள்ளை வலசை ஊராட்சி செயலாளர் கே.வேம்பையா அனைவருக்கும் நன்றி கூறினார்.

செய்தியாளர்

AGM கணேசன்