தமிழக விவசாயிகள் சங்கத்தின் உயர் மட்ட விவசாயிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது,!

கிருஷ்ணகிரி

தமிழக விவசாயிகள் சங்கத்தின் உயர் மட்ட விவசாயிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது,!

கிருஷ்ணகிரியில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் உயர் மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் விவசாயிகளின் ஆதரவாக போராடிய பி.ஆர் பாண்டியன் உள்பட இரண்டு பேருக்கு வழங்கப்பட்டுள்ள 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையை நீதிபதிகள் மறு பரிசிலினை செய்து ரத்து செய்யப்பட வேண்டும் என்று கூட்டத்தின் வாயிலாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கிருஷ்ணகிரியில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் உயர் மட்ட விவசாயிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் ரவி, மாவட்ட பொது செயலாளர் அனுமந்தராசு ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாராக தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் இராமகவுண்டர் கலந்துக் கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

அப்போது பேசிய இராம கவுண்டர் கடந்த 2012 ம் ஆண்டு மத்திய அரசு  காவேரி டெல்டா மாவட்டத்தில் ஓ.என்.ஜி.சி அமைக்க அனுமதி அளித்ததை எதிர்த்தும் விவசாயத்தை காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக அனைத்து விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

இந்தப் போராட்டத்தில் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியதாக கூறி வி.ஆர்.பாண்டியன், செல்வராஜ் உள்ளிட்ட 22 பேர்கள் மீது பசுமை தீர்பாயம் வழக்கு தொடரப்பட்டது. பின்னர் வழக்கு முடிந்து வைக்கப்பட்ட நிலையில் மீண்டும் இந்த வழக்கினை நீதிமன்றம் கொண்டு சென்று பி.ஆர்.பாண்டியன் மற்றும் செல்வராஜ் ஆகியோருக்கு நீதி மன்றம் 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ள சம்பவம் ஒட்டு மொத்த விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

விவசாய நிலம் மற்றும் விவசாயிகளை காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக போராடிய குற்றத்திற்காக இன்று பி.ஆர்.பாண்டியன் உள்பட இரண்டு பேருக்கு வழங்கப்பட்டுள்ள இந்த தீர்ப்பினை மாண்புமிகு நீதிபதிகள் ரத்து செய்யப்பட வேண்டும் என்று இந்த கூட்டத்தின் வாயிலாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக இராமகவுண்டர் தெரிவித்தார்.

அப்போது தமிழக விவசாய சங்கத்தினை சேர்ந்த நிர்வாகிகளான சின்னசாமி, சரவணகுமார், சுரேஷ், குமரன், பிரபு , வெங்கடேஷ் பாபு, ராமன், சக்திவேல், கிருஷ்ணன், எல்லப்பன், ரமேஷ் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் உடன் இருந்தனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ