அகழாய்வுகள் குறித்து அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி .!

கிருஷ்ணகிரி

அகழாய்வுகள் குறித்து அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி .!

கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட நிர்வாகம், பள்ளி கல்வித்துறை, அரசு அருங்காட்சியகம், தொல்லியல் துறை, கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு இணைந்து கிருஷ்ணகிரி ஒன்றிய, தொடக்க, நடுநிலை, உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான, தமிழக முதல்வரும் கிருஷ்ணகிரி மாவட்ட அகழாய்வுகளும் கருத்தரங்கை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் குமார் இ.ஆ.ப., பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன் ஆகியோர் துவக்கி வைத்து, அகழாய்வுகள் குறித்து அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை பார்வையிட்டனர்.

உடன் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பொறுப்பு முனிராஜ், அருங்காட்சியக காப்பாட்சியர் சிவகுமார், கிருஷ்ணகிரி நகர் மன்ற தலைவர் திருமதி பரிதா நவாப், கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவின் ஒருங்கிணைப்பாளர் தமிழ்ச்செல்வன், கல்வெட்டுக்காவலர் கோவிந்தராஜ்,  விஜயகுமார், சரவணகுமார், ரவி, ஜாவீத், மாருதி மனோகரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

செய்தியாளர்

மாருதி மனோ