அரசு மருத்துவமனையில் தமிழக வெற்றி கழகத்தின் இளைஞர் அணி சார்பில் மாபெரும் இரத்ததான முககாம் .!

கிருஷ்ணகிரி

அரசு மருத்துவமனையில் தமிழக வெற்றி கழகத்தின் இளைஞர் அணி சார்பில் மாபெரும் இரத்ததான முககாம் .!

கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் தமிழக வெற்றி கழகத்தின் இளைஞர் அணி சார்பில் மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது,
இதில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இரத்தம் தானமாக வழங்கி பொதுமக்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்தினர்.

கிருஷ்ணகிரி மத்திய மாவட்டம்,  வேப்பனஹள்ளி ஒன்றிய தமிழக வெற்றி கழகத்தின் இளைஞர் அணி சார்பில் தமிழக வெற்றி கழகத்தின் நிறுவனர் விஜய் அவர்களின் பிறந்த நாளினை முன்னிட்டு பல்வேறு மக்கள் நல நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

தமிழக வெற்றி கழகத்தின் பொறுப்பாளர் ஆனந்த் உத்தரவின்படியும் கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட அமைப்பாளர் லோகேஷ் ஆகியோரின் வழிக்காட்டுதலின்படி நடைபெற்ற இந்த இந்த விழாவின் போது நாரலப்பள்ளி கிராமத்தில் இலவச மருத்துவ முகாம் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் மாபெரும் இலவச இரத்ததான முகாம் நடைபெற்றது.

வேப்பனஹள்ளி ஒன்றிய தமிழக வெற்றி கழகத்தின் இளைஞர் அணி அமைப்பாளர் சூர்யா தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்களது இரத்தத்தினை மருத்துவமனைக்கு தானமாக வழங்கினார்கள். அரசு மருத்துவமனைக்கு தானகவே முன்வந்து இரத்தம் வழங்கி பொதுமக்களிடையே இரத்தம் வழங்குவது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தியவர்களுக்கு அரசு சார்பில் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

மேலும் இந்த இரத்ததான முகாமில் தமிழக வெற்றி கழகத்தின் இளைஞர் அணியை சேர்ந்த ராஜா முத்து, முத்தமிழன், சையத் யாரப், மணிகண்டன், ரீகன், நவாஸ், பாரத், மகேஷ், லோகநாதன், அபி, பார்தீபன் ஜமீர், 
ஹரி பாஸ்கர், பிரகாஷ், விஜய்,  பழனி, ஆதி உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.