செம்மஞ்சேரியில் ஏடிஎம்மில் பணம் எடுக்க சென்ற இளைஞர்களுக்கு கிடைத்த 10 ஆயிரம் ரூபாய். .!
சென்னை

செம்மஞ்சேரியில் ஏடிஎம்மில் பணம் எடுக்க சென்ற இளைஞர்களுக்கு கிடைத்த 10 ஆயிரம் ரூபாய்.
நேர்மையாக காவல் நிலையத்தில் ஒப்படைத்த பெரும்பாக்கம் இளைஞர்கள்.
சென்னை பெரும்பாக்கம் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பை சேர்ந்தவர்கள் சதீஷ்குமார்(35), மற்றும் கிஷோர்(25), ஆகிய இருவரும் வீட்டின் தேவைக்காக, செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்திற்கு பணம் எடுக்க சென்றுள்ளனர்.
ஆனால் ஏடிஎம் மையத்திற்குள் சென்ற உடன் பணம் எடுப்பதற்கு முன்பாக ஏடிஎம்மில் பணம் எடுக்கும் இடத்தில் பணம் இருந்துள்ளதை கண்டனர்.
இதனையடுத்து அந்த பணத்தை எண்ணிப் பார்த்ததில் 10 ஆயிரம் ரூபாய் இருந்தது.
உடனடியாக பணத்தை எடுத்துக் கொண்டு பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
பணத்தை நேர்மையாக ஒப்படைத்த பெரும்பாக்கம் இளைஞர்களை பெரும்பாக்கம் போலீஸார் பாராட்டினர்.
மேலும் ஏடிஎம்மில் பணத்தை எடுக்காமல் விட்டுச் சென்றது யார் என காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
செய்தியாளர்
S S K