எம்.எல்.ஏ.வுடன் உல்லாசம் ,வீடியோ எடுத்த நபரை கொலை செய்து கூவத்தில் வீசிய பவன் கல்யாண் கட்சி மா.செ. தட்டித் தூக்கிய தமிழ்நாடு போலீஸ். !

சென்னை

எம்.எல்.ஏ.வுடன் உல்லாசம் ,வீடியோ எடுத்த நபரை கொலை செய்து கூவத்தில் வீசிய பவன் கல்யாண் கட்சி மா.செ. தட்டித் தூக்கிய தமிழ்நாடு போலீஸ். !

சென்னை: எம்எல்ஏவுடன் உள்ள கள்ளத்தொடர்பை வீடியோ எடுத்ததால் வாலிபரை திருப்பதியில் கொலை செய்து ஏழுகிணறு பேசின்பாலம் கூவம் ஆற்றில் சடலத்தை வீசிய மாவட்ட பெண் தலைவர் உள்பட 5 பேர் கும்பலை சென்னை போலீசார், ஆந்திரா சென்று கைது செய்தனர்.

சென்னை ஏழுகிணறு பேசின்பாலம் கூவம் ஆற்றின் அருகில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ரத்த காயங்களுடன் இறந்து கிடப்பதாக கடந்த 8ம் தேதி ஏழுகிணறு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, துணை கமிஷனர் சுந்தரவடிவேல் தலைமையில் தனிப்படை போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று, வாலிபரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, கொலை செய்த உடலை ஒருவர் கூவத்தில் வீசி விட்டு தப்பி சென்றது தெரியவந்தது. கொலை செய்யப்பட்டவரின் பையில் இருந்த துண்டு சீட்டை எடுத்து பார்த்தபோது, திருப்பதியை சேர்ந்த னிவாசலு என தெரியவந்தது. வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர் கொலை என்பதால் துணை கமிஷனர் தலைமையில் தனிப்படை அமைத்து கமிஷனர் அருண் உத்தரவிட்டார்.

தனிப்படை போலீசார், அவரது செல்போனுக்கு யாரெல்லாம் தொடர்பு கொண்டுள்ளார்கள் என்பது குறித்தும், கண்காணிப்பு கேமராவில் பதிவான வாகனம் மற்றும் அதில் வந்தவர்கள் குறித்தும் விசாரணை செய்ததில் ஆந்திராவைச் சேர்ந்த சந்திரபாபு மற்றும் அவரது ஆதரவாளர்கள் வந்து சென்றது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து இது குறித்து தீவிர விசாரணை நடத்தியபோது, திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. ஆந்திரா மாநிலம் ரேணிகுண்டாவைச் சேர்ந்தவர் பெனிட்டா கோட்டா (35). இவர், நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியில் மாவட்ட தலைவராக உள்ளார். இவருக்கும் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஜனசேனா கட்சியின் எம்எல்ஏ ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது கள்ளக்காதலாக மாறியுள்ளது. இவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துக் கொண்டனர். அவர்கள் இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்ததை னிவாசலு வீடியோ எடுத்துள்ளார். இதை எம்எல்ஏவும், பெனிட்டாவும் பார்த்து விட்டனர். அவர்கள் னிவாசலுவை மிரட்டி வீடியோவை கேட்டபோது அவர் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. அவர் பணம் கேட்டு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெனிட்டா, இது குறித்து தனது கணவர் சந்திரபாபுவிடம் கூறியுள்ளார். பின்னர் கணவன், மனைவி இருவரும் சேர்ந்து தன்னிடம் வேலை செய்யும் சிவக்குமார், கோபி, தாசர் ஆகியோர் மூலம் னிவாசலுவை வரவழைத்து தாக்கி கொலை செய்துள்ளனர். பிணத்தை ஆந்திராவில் போட்டால் மாட்டிக் கொள்வோம். தங்களது அரசியல் வாழ்க்கை அழிந்து விடும் என்று கருதியவர்கள், னிவாசலுவின் உடலை எடுத்துக் கொண்டு காட்டுக்குள் வீச முடிவு செய்தனர். அதேநேரத்தில் பெனிட்டாவின் தந்தை உடல்நலக்குறைவு காரணமாக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரைப் பார்க்க வரும்போது உடலை சென்னைக்கு எடுத்து வந்து கூவத்தில் வீசிவிட்டுச் சென்றது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து ஜனசேனா கட்சியின் மாவட்ட தலைவரான பெனிட்டா அவரது கணவர் சந்திரபாபு, ஊழியர்கள் சிவக்குமார், கோபி, தாசர் ஆகிய 5 பேரை நேற்று இரவு ஆந்திரா மாநிலம் ரேணிகுண்டா சென்று கைது செய்தனர். அவர்களிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை போலீசாரை போலீஸ் கமிஷனர் அருண் அழைத்து பாராட்டினார்.