சட்டமன்ற உறுப்பினர் நிதியான 18.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கட்டிடங்களை திறந்து வைத்த கே.பி. முனுசாமி எம்.எல்.ஏ.!

கிருஷ்ணகிரி

சட்டமன்ற உறுப்பினர் நிதியான 18.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கட்டிடங்களை திறந்து வைத்த கே.பி. முனுசாமி  எம்.எல்.ஏ.!

வேப்பனஹள்ளி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியான 18.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கட்டிடங்களை திறந்து வைத்த கழக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி 

கிருஷ்ணகிரி மேற்கு  மாவட்டம், வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சூளகிரி மத்திய ஒன்றியம், பீர்ஜேப்பள்ளி, கொம்மேப்பள்ளி ஆகிய இரண்டு கிராமங்களில்

வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 18.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பல்நோக்கு மையம், நியாயவிலைக்கடை ஆகிய இரண்டு கட்டிடங்கள் கட்டப்பட்டிருந்த நிலையில் கழக துணை பொதுச்செயலாளர், வேப்பனஹள்ளி எம்எல்ஏ. கே.பி.முனுசாமி அவர்கள் கட்டிடங்களை ரிப்பன்வெட்டி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக துவக்கி வைத்து பெண்களுக்கு நலதிட்ட உதவிகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சூளகிரி மத்திய ஒன்றிய செயலாளர் மாதேஷ் அவர்கள் செய்திருந்தார்

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் மல்லையா, மாவட்ட துணை செயலாளர் கலைச்செல்வி ராமன், சூளகிரி ஒன்றிய செயலாளர்கள் பாபு என்கிற வெங்கடாசலம், பாலசுப்ரமணியன், கெலமங்கலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகன்,எம்ஜிஆர் மன்ற மாவட்ட துணை செயலாளர் ஜெயபிரகாஷ், கழக நிர்வாகி கேடிஆர் என்கின்ற திமிராஜ்,வர்த்தகரணி மாவட்ட செயலாளர் சீனிவாசன்,இளைஞர் பாசறை ஒன்றிய செயலாளர் மஞ்சுநாத், ஐடி விங்க் மாவட்ட இணை செயலாளர் பிரசண்ணா, நியாய விலை கடை விற்பனையாளர் கணேசன், மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் கவுன்சிலர்கள், ஊருக்கு பொதுமக்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

செய்தியாளர்

மாருதி மனோ