அரசு மருத்துவக் கல்லூரியில் மனித உரிமைகள் தின உறுதிமொழி நிகழ்ச்சி .!

கிருஷ்ணகிரி

அரசு மருத்துவக் கல்லூரியில் மனித உரிமைகள் தின உறுதிமொழி நிகழ்ச்சி .!

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரியில் 10.12.2025 புதன்கிழமை காலை 11.00 மணியளவில் மனித உரிமைகள் தின உறுதிமொழி நிகழ்ச்சி கல்லூரி முதல்வர் மரு. க.சத்தியபாமா எம் எஸ், (பொது அறுவை சிகிச்சை) தலைமையில் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரியில் கலையரங்க கூடத்தில் 400 க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள், கல்லூரி பேராசிரியர்கள், அலுவலர்கள், அமைச்சுப் பணியாளர்கள்,  ஆகிய அனைவரும் இன்று 10.12 .2025 ல் மனித உரிமைகள் ஆணையத்தின் செயலர் கடித எண் 1229 / SHRC / 25 , நாள்: 24.11.25 -ன் படி மனித உரிமைகள் தின உறுதிமொழி கல்லூரி முதல்வர் வாசிக்க அனைத்து மருத்துவ மாணவர்களும் அலுவலர்களும் தொடர்ந்து உறுதி மொழியை ஏற்றனர். தொடர்ந்து மனித உரிமைகள் ஆணையத்தின் சுருக்கமான குறிப்பு வாசிக்கப்பட்டது.

மனித உரிமைகள் தின உறுதிமொழி

இந்திய அரசியலமைப்பு சட்டத்திலும் இந்தியாவில் செயல்படுத்தத் தக்க பன்னாட்டு சட்டங்களிலும் வரையறுக்கப்பெற்ற மனித உரிமைகள் குறித்து உண்மையுடனும் பற்று உறுதியுடனும் அனைவரின் மனித உரிமைகளை மதித்து நடப்பதுடன் மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையில் நான் என்னுடைய கடமைகளை ஆற்றுவேன் என்னுடைய எண்ணம் செல் அல்லது செயல் மூலம் பிறருடைய மனித உரிமைகளை மீறுகிற எந்த ஒரு செயலையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ செய்ய மாட்டேன் மனித உரிமைகள் மேம்படுத்துவதற்கு நான் எப்போதும் ஆயத்தமாக இருப்பேன் என்று உளமாற உறுதி கூறுகிறேன்.

இந்நிகழ்ச்சியை தொடர்ந்து 2025 -26 ஆம் ஆண்டில் சேர்க்கை பெற்ற முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களில் 7.5% சதவீதத்தில் சேர்ந்த 10 (பத்து) மாணவ மாணவியர்களுக்கு தமிழக அரசு வழங்கும் மருத்துவ படிப்பிற்கான முதலாம் ஆண்டு பாட புத்தகங்கள் இலவசமாக பெற்று வழங்கப்பட்டது. மருத்துவ மாணவர்கள் முதல்வருக்கும் தமிழக அரசுக்கும் தமது நெஞ்சம் நிறைந்து நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் மருத்துவ கண்காணிப்பாளர் மரு. P.சந்திரசேகரன், துணை முதல்வர் மரு.R.P.சாத்விகா, உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் மரு.செல்வராஜ், மரு.மது, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பேராசிரியர்கள் மரு.தண்டர் சீப் (சட்டம் சார்ந்த மருத்துவத்துறை), மரு.உமா மகேஸ்வரி (உயிர் வேதியல் துறை), மரு.பத்மலதா ( மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவம்), மரு. செந்தில் வடிவு (நுண்ணுயிரியல் துறை), இணைப்பேராசிரியர்கள் மரு.சதாசிவம், மரு. அறிவுமணி, மரு.தேவி, மரு.வமிதா, மரு. ராஜலக்ஷ்மி, மரு.லட்சுமி ஸ்ரீ ஆகியோர் உறுதிமொழி ஏற்றனர்.

இறுதியில் நிர்வாக அலுவலர் எஸ்.கே.சரவணன் நன்றி உரையாற்றினார்.

செய்தியாளர்

மாருதி மனோ