ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ முருகன் திருக்கோயிலில் சூரசம்ஹார விழா .!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பிருந்தாவன் நகர், ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ முருகன் திருக்கோயிலில் இன்று சூரசம்ஹார விழா நடைபெற்றது.
முன்னதாக ஸ்ரீ முருகனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் முருகன் எழுந்தருளி சூரனை வதம் செய்தார். அப்போது அரோகரா கோஷங்களை எழுப்பி ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருகனை வழிபட்டனர்.

அதனைத் தொடர்ந்து ஸ்ரீ முருகன் சமேத வள்ளி தெய்வானைக்கு பால், தயிர், குங்குமம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவிய பொருட்களால் அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டது. இந்த விழாவில் பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
