அதிமுகவில் இணைந்த விசிகவினர் : தமிழகத்தில் 70 ஆண்டில் இல்லாத கடன், 5 ஆண்டு திமுக ஆட்சியில் வந்துள்ளது, முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி குற்றச்சாட்டு.!
கிருஷ்ணகிரி
அதிமுகவில் இணைந்த விசிகவினர் : தமிழகத்தில் 70 ஆண்டில் இல்லாத கடன், 5 ஆண்டு திமுக ஆட்சியில் வந்துள்ளது, முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி குற்றச்சாட்டு
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் விசிக உள்ளிட்ட மாற்று கட்சிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். இந்த இணைப்பு நிகழ்ச்சியின்போது பாலகிருஷ்ணா ரெட்டி அனைவருக்கும் அதிமுகவின் கருப்பு, வெள்ளை, சிகப்பு கட்சி துண்டை அணிவித்து வரவேற்றார்.
அதனைத் தொடர்ந்து பேசிய அவர், திமுக ஆட்சியில் தமிழகத்தில் கொலை கொள்ளை அதிக அளவில் நடந்து வருகிறது. அமைதியான கிராமமான ஓசூர் தொரப்பள்ளி கிராமத்தில் பல்வேறு கொலைகள் நடந்து வருகிறது.
தமிழகத்தில் கடந்த 70 ஆண்டுகளில் வாங்கப்பட்ட கடன் 5 லட்சம் கோடி ரூபாய், ஆனால் தற்போது ஆட்சியில் உள்ள திமுக 5 ஆண்டுகளில் 5 லட்சம் கடனை வாங்கி உள்ளது. இந்தியாவின் அதிக கடன் உள்ள மாநிலமாக தமிழகம் உள்ளது. கடன் தொகை ஒவ்வொரு மக்களின் தலை மீதும் விழும், இந்த கடனை தீர்க்க நம் மீது அதிக வரியை விதித்து வருகிறார்கள் என குற்றம் சாட்டினார்.
விசிக ஓசூர் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் முனிராஜ் தலைமையில் 200க்கும் மேற்பட்ட தொண்டர்கள் அதிமுகவில் இணைந்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை அதிமுகவின் ஒன்றிய செயலாளர் ஹரிஷ் ரெட்டி, ஒன்றிய அவைத்தலைவர் முனி ராம் அப்பா மற்றும் பகுதி செயலாளர் ராஜு ஆகியோர் செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் சூளகிரி ஒன்றிய செயலாளர் மாதேஷ், பேரவை ஒன்றே செயலாளர் ரவிக்குமார், மாணவரணி மாவட்ட தலைவர் ஆதி, ஓசூர் மாமன்ற உறுப்பினர் தில்ஷத் சத்ரகுமான், ஒன்றிய நிர்வாகி ஹரிஷ், ஓசூர் சார்பு அணி பகுதி செயலாளர் மணி, ஒன்றிய கழக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
.
செய்தியாளர்
மாருதி மனோ
