கிருஷ்ணகிரியில் நடைபெற்ற காங்கிரஸ் நிர்வாகியின் திருமண விழாவில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிநாத் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.!

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற காங்கிரஸ் நிர்வாகியின் திருமண விழாவில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிநாத் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.!

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற காங்கிரஸ் நிர்வாகியின் திருமண விழாவில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிநாத் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினத்தை சேர்ந்த இளைஞர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சதாம் உசேன் திருமண விழா கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த திருமண விழாவிற்கு கிருஷ்ணகிரி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிநாத் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்.

மேலும் இந்த திருமண விழாவில் மாவட்ட திட்ட குழு உறுப்பினர் ரகு, கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பி.சி.சேகர், முன்னாள் மாவட்டத் தலைவர்கள் நாஞ்சில் ஜேசு, கிருஷ்ணமூர்த்தி, நாராயண மூர்த்தி, காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு உறுப்பினரும், முன்னாள் மாவட்டத் தலைவருமான எல். சுப்பிரமணியன், ரயில்வே கோட்டம் ஆலோசனைக்குழு உறுப்பினர் ரகமத்துல்லா, டாக்டர் தகி, பர்கூர் நகர தலைவர் யுவராஜ் , ஆஜீத் பாஷா உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

செய்தியாளர் 

மாருதி மனோ