தென்காசி தெற்கு மாவட்ட ம.தி.மு.க செயற்குழு கூட்டம்.!
தென்காசி
தென்காசி தெற்கு மாவட்ட ம.தி.மு.க செயற்குழு கூட்டம்.
இராம.உதயசூரியன் அழைப்பு
தென்காசி, நவ - 15
தென்காசி தெற்கு மாவட்ட மதிமுக செயற்குழுக் கூட்டம் வரும் 20.11.2025 வியாழக்கிழமை குத்துக்கல் வலசையில் உள்ள வைகோ செயலகத்தில் வைத்து நடைபெற உள்ளது.
இது குறித்து தென்காசி தெற்கு மாவட்ட மதிமுக செயலாளர் இராம. உதயசூரியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்
தென்காசி தெற்கு மாவட்ட ம.தி.மு.க. செயற்குழு கூட்டம் வருகின்ற 20.11.2025 வியாழக்கிழமை பிற்பகல் 3.00 மணி அளவில் குத்துக்கல் வலசையில் உள்ள தென்காசி மாவட்ட மறுமலர்ச்சி திமுக அலுவலகமான வைகோ செயலகத்தில் வைத்து மாவட்ட கழக அவைத் தலைவர் வெங்கடேஷ்வரன் தலைமையில் நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அனைவரையும் மதிமுக
தலைமை தணிக்கை குழு உறுப்பினர் சுரண்டை இராமகிருஸ்ணன் வரவேற்று பேசுகிறார்.
இந் நிகழ்ச்சியில் மறுமலர்ச்சி திமுக துணைப் பொதுச் செயலாளர் வழக்கறிஞர்
தி.மு. இராசேந்திரன், மதிமுக சட்டமன்ற குழுத் தலைவர் டாக்டர் தி.சதன் திருமலைக்குமார் எம்எல்ஏ, மதிமுக மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் சுப்பாராஜ் ஆகியோர் மதிமுக தலைமை நிர்வாகக் குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் மற்றும் 2026 சட்டமன்றத் தேர்தல் நிதி-கழக வளர்ச்சி நிதி திரட்டுதல்,
தமிழர் திருநாள் ஜனவரி 15 தலைவர் வைகோ பங்கேற்கும் கலிங்கப் பட்டி பொங்கல் விழாவில் எழுச்சியுடன் பங்கேற்பது.
ஜனவரி 25 வீர வணக்க நாள் கூட்டத்தை தென்காசி வடக்கு
தெற்கு மாவட்டங்கள் இணைந்து நடந்துவது. இதர கழக ஆக்கப் பணிகள்.மற்றும் ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள சிறப்பு வாக்காளர் திருத்த பணி மற்றும் கழக வளர்ச்சிக்காக பொதுச் செயலாளர் வைகோ முன்னெடுக்கும் கழகப் பணிகள் பற்றி விரிவாகவும் விளக்கமாகவும் பேசுகிறார்.
இக்கூட்டத்தில் தென்காசி தெற்கு மாவட்ட மதிமுக நிர்வாகிகள் மற்றும் மதிமுக தலைமை கழக நிர்வாகிகள், ஒன்றிய நகர பேரூர் செயலாளர்கள், செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள், சார்பு அணிகளின் அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள்,சிறப்பு அழைப்பாளர்கள் ஆகியோர் தவறாமல் கலந்து கொள்ள அவர் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்
AGM கணேசன்
