சூர்யா அறக்கட்டளை சார்பில் அதிநவீன அமரர் ஊர்தி மற்றும் ஆயிரம் நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள், அன்னதானம் வழங்கும் விழா நடைபெற்றது.!

சென்னை

சென்னை வேளச்சேரி 100 அடி சாலையில் சூர்யா அறக்கட்டளை சார்பில் அதிநவீன அமரர் ஊர்தி மற்றும் ஆயிரம் நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள், அன்னதானம் வழங்கும் விழா நடைபெற்றது

சென்னை வேளச்சேரி 100 அடி சாலையில் சூர்யா அறக்கட்டளை என்ற பெயரில் தனியார் அறக்கட்டளை கடந்த 8 ஆண்டுகளாக அப்பகுதி மக்களின்  நலனுக்காக செயல்பட்டு வருகிறது.

அறக்கட்டளையின் ஒன்பதாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு அப்பகுதியில் இருக்கும் பொது மக்களின் சேவைக்காக நவீன வசதிகளுடன் கூடிய அமரர் ஊர்தி அர்ப்பணிக்கும் நிகழ்வு அறக்கட்டளை நிறுவனர் மற்றும் அதிமுகவின் வேளச்சேரி மேற்கு பகுதி கழக செயலாளர் எம்.ஏ.மூர்த்தி  ஏற்பாட்டில் நடைபெற்றது. 

நிகழ்வின் தொடக்கமாக எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் திருஉருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி மரியாதை செய்தப்பட்டது. 

பின்னர் வாகனத்திற்கு பூஜை போடப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மூர்த்தி கொடியசைத்து துவக்கி வைத்தார். 

அதன் பின்னர் அங்கு கூடியிருந்த பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அறுசுவை உணவையும் வழங்கினார். 

கடந்த 8 ஆண்டு காலமாக சூர்யா அறக்கட்டளை சார்பில் ஏழை மாணவர்களுக்கு கல்விக்கட்டணம், வாரம் தோறும் 500 பேருக்கு அன்னதானம், ஏழை எளியோரின் வாழ்வாதாரத்திற்காக தொழில் உருவாக்கி கொடுப்பது, சொர்க்க ரதம், ஃபிரீசர் பாக்ஸ், என ஏராளமான உதவிகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் 

           S S K