விலை உயர்ந்த பைக்கை ஆசைப்பட்டு திருடிய இருவர் சிசிடிவி பதிவால் போலீசில் சிக்கினர்.!

சென்னை

விலை உயர்ந்த பைக்கை ஆசைப்பட்டு திருடிய இருவர் சிசிடிவி பதிவால் போலீசில் சிக்கினர்.!

விலை உயர்ந்த பைக்கை ஆசைப்பட்டு திருடிய இருவர் சிசிடிவி பதிவால் போலீசில் சிக்கினர்


சென்னை, குரோம்பேட்டை அருகே குமராபுரம் பகுதியை சேர்ந்தவர் பவுல் ஜோசப்,29, சோழிங்கநல்லுாரில் உள்ள ஐ.டி.,நிறுவன ஊழியர். இவரது வீட்டின் வெளியே நிறுத்தி வைத்திருந்த யமஹா ஆர்15 பைக்கை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

இதுகுறித்து பவுல் ஜோசப் சிட்லப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். கண்காணிப்பு கேமரா காட்சிகளை சேகரித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இதில், பைக்கை திருடியது, குரோம்பேட்டையில் வீட்டு உபயோக சிலிண்டர்களை டெலிவரி செய்யும் மதன்,20. இவரது நண்பர் விழுப்புரத்தை சேர்ந்த கேட்டரிங் மாணவர் சண்முகம்,19, என்பது தெரிய வந்தது.

இவர்கள் திருடிய பைக்கை மீட்ட போலீசார் இருவரையும்  கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஆர் ஒன் ஃபைவ் மோட்டார் சைக்கிளுக்கு ஆசைப்பட்டு அதை திருடிய இருவரும் சிசிடிவி ஆல் போலீசில் சிக்கி க்கு சிறைக்கு  சென்றுள்ளனர்.

செய்தியாளர்

          S S K