வழிகாட்டுதலின்படி க்ளீன் கிருஷ்ணகிரி அமைப்பு சார்பாக சாக்கடை கழிவுகளை அகற்றி தேவையற்ற முள் புதர்களை சுத்தம் செய்து கொடுக்கப்பட்டது.!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் தே.மதியழகன் MLA வழிகாட்டுதலின்படி க்ளீன் கிருஷ்ணகிரி அமைப்பு, கிருஷ்ணகிரி திமுக மேற்கு நகர செயலாளர் N. அஸ்லம் ரஹ்மான் ஷெரிப், கிருஷ்ணகிரி கிழக்கு நகர கழக செயலாளர் M.வேலுமணி ஆகியோரின் ஏற்பாட்டில் அடுத்த கட்ட தூய்மை பணியாக லண்டன் பேட்டை ஏரிக்கரை, நாயுடு தெரு, முகமது உசேன் தெரு, பாபா சாயபு தெரு ஆகிய பகுதிகளை இன்று முழுமையாக சுத்தம் செய்து சாக்கடை கழிவுகளை அகற்றி தேவையற்ற முள் புதர்களை சுத்தம் செய்து கொடுக்கப்பட்டது.


அதேபோல் ஏரிக்கரை ஓரமாக உள்ள தேவையில்லா கருவேல மரங்களை அகற்றி சுத்தம் செய்யும் பணியும் மேற்கொள்ளப்பட்டது.
நகர மன்ற உறுப்பினர் ஆயிஷா மொஹம்மத் ஜான், சிறுபான்மை பிரிவு மாவட்ட துணை அமைப்பாளர் ரியாஸ், மாவட்ட துணை செயலாளர் நகர மன்ற துணைத் செயலாளர் சாவித்திரி கடலரசு மூர்த்தி, செய்தி தொடர்பாளர் சீனிவாசன், நகர மன்ற உறுப்பினர்கள் சுகுமார், ஜெயக்குமார் சந்தோஷ், முகமது அலி, டாக்டர் சுரேஷ் குமார், சுனில் குமார், பிர்தோஸ்கான், பாலாஜி, புவனேஸ்வரி, பகுதியை சேர்ந்த நகர மன்ற உறுப்பினர், வார்டு நிர்வாகிகள் முகமது சாதிக், நவாஸ், சபீர், மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் விஜய் ராஜசேகர், மாவட்ட மகளிர் தொண்டர்கள் அமைப்பாளர் புஷ்பா, மாவட்ட வர்த்தக அணி துணைத் தலைவர் ஆர் கே பழனி, மாவட்ட மகளிர் அணி துணை தலைவர் சரோஜா, மாவட்ட சிறுபான்மை நல உரிமை பிரிவு துணை அமைப்பாளர் பவர் ஜெயராஜ் மற்றும் கிருஷ்ணகிரி தகவல் தொழில்நுட்ப அணி தொகுதி ஒருங்கிணைப்பாளர் லட்சுமணகுமார் மனோகரன், நகர தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் கிரி, நகர இளைஞரணி துணை அமைப்பாளர் பாலு, கழக நிர்வாகிகள் தங்கவேலு, ஆசிப், சபீர், ஜாமீர், திருப்பதி, ஜாவித், நிஷாந்த், வட்ட செயலாளர், வட்டப் பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள் பலரும் தூய்மை பணியில் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
