அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் ஆலயத்தின் 80-ஆம் ஆண்டு ஆடிக் கிருத்திகை வரும் 16-ஆம்தேதி பெருவிழா தே. மதியழகன் எம்எல்ஏ வுக்கு அழைப்பு..!
கிருஷ்ணகிரி

ஜெகதேவி கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் ஆலயத்தின் 80-ஆம் ஆண்டு ஆடிக் கிருத்திகை வரும் 16-ஆம்தேதி பெருவிழா தே. மதியழகன் எம்எல்ஏ வுக்கு அழைப்பு.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஒன்றியம், ஜெகதேவி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பாலவிநாயகர், அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் ஆலயத்தின் 80-ஆம் ஆண்டு ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு புஷ்பக் காவடி, மயில் காவடி பெருவிழா வரும் 16-ஆம் தேதி நடைபெற உள்ளது.
நிகழ்ச்சிக்கு, பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன் எம் எல் ஏ அவர்களை ஜெகதேவி கிராம மக்கள் மற்றும் விழா குழுவினர், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெ.கே.கிருபாகரன் தலைமையில் முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சரவணன், ஊர் கவுண்டர் வேலு, பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் நெடுஞ்செழியன், ஜோதி இராவணன், கிருஷ்ணமூர்த்தி, ராமமூர்த்தி, விநாயகம் ஆகியோர் நடைபெற இருக்கும் அருள்மிகு ஸ்ரீ பால விநாயகர் அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் ஆலயத்தின் திருவிழாவிற்கு நேரில் சந்தித்து அழைப்பிதழ் பத்திரிக்கை வழங்கினர்.
செய்தியாளர்
மாருதி மனோ