கொடிக்குறிச்சியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா இறகு பந்து போட்டி .!
தென்காசி
கொடிக்குறிச்சியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா இறகு பந்து போட்டி
திமுக மாவட்ட பொறுப்பாளர் வே.ஜெயபாலன் பரிசு வழங்கினார்.
தென்காசி, நவ - 24
தென்காசி மாவட்டம், கொடிக்குறிச்சியில் அமைந்துள்ள ஓடி விளையாடு ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் தமிழக துணை முதல்வர் கழக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் 48வது பிறந்த நாளை முன்னிட்டு நடை பெற்ற இறகு பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே.ஜெயபாலன் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
திருநெல்வேலி தென்காசி தூத்துக்குடி கன்னியாகுமரி ஆகிய 4மாவட்ட அளவில் நடைபெற்ற இறகு பந்து போட்டியினை துவக்கி வைத்து வெற்றி பெற்ற 4. அணிகளுக்கு 7 ஆயிரம் 5 ஆயிரம் 2 ஆயிரம் 2 ஆயிரம் என 16 ஆயிரம் ஆயிரம் ரூபாயை மாவட்ட கழகத்தின் சார்பில் மாவட்ட கழக பொறுப்பாளர் வே_ஜெயபாலன் வழங்கி பாராட்டினார்.
இந் நிகழ்ச்சியில் ஒடி விளையாடு ஸ்போர்ட்ஸ் கிளப் நிறுவனர் முருகேஷ் , ஒன்றிய செயலாளர் ஆர்.எம்.அழகு
சுந்தரம், மேலகரம் பேரூர் கழக செயலாளர் சுடலை, குத்தாலிங்கம் உட்பட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
AGM கணேசன்
