தென்காசி மாவட்ட திமுக அலுவலகத்தில் இம்மானுவேல் சேகரன் 68 ஆவது நினைவு தினம் .!
தென்காசி
தென்காசி மாவட்ட திமுக அலுவலகத்தில் இம்மானுவேல் சேகரன் 68 ஆவது நினைவு தினம்
தென்காசி செப் 11
தென்காசி மாவட்ட திமுக அலுவலகத்தில் வைத்து இம்மானுவேல் சேகரன் 68 வது நினைவு தினம் இன்று நடைபெற்றது. தென்காசி மதுரை ரோட்டில் அமைந்துள்ள கலைஞர் அறிவாலயமான தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் வைத்து தியாகி இம்மானுவேல் சேகரன் 68 வது நினைவு தினம் நடைபெற்றது.
அலங்கரிக்கப்பட்ட அன்னாரது திருஉருவ படத்திற்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே.ஜெயபாலன் தலைமை வகித்து மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் மாநில சட்டத்துறை இணைச் செயலாளர் ரவிச்சந்திரன், மாநில மருத்துவர் அணி இணைச் செயலாளரும், தென்காசி தொகுதி பொறுப்பாளரும் ஆகிய டாக்டர் கலை கதிரவன், மாவட்ட துணை செயலாளர்கள் வழக்கறிஞர் கனிமொழி, கென்னடி, பொருளாளர் ஷெரீப், தலைமை பொதுக்குழு உறுப்பினர் சாமிதுரை, அருள், ஒன்றிய செயலாளர்கள் சீனித்துரை, அழகு சுந்தரம், ரமேஷ், சேக் முகமது, சிவக்குமார், ஜெயா ஐயப்பன்,திவான் ஒலி, நகர செயலாளர்கள் வழக்கறிஞர் வெங்கடேசன், சாதிர் பேரூர் செயலாளர்கள் முத்தையா, ராஜராஜன்,விவசாய அணி கோமதி நாயகம், நகர நிர்வாகிகள் பால்ராஜ், ராம்துரை, வெல்டிங் மாரியப்பன், திமுக மாவட்ட அலுவலக மேலாளர் ராமராஜ், பிரேம் குமார், முத்து சுப்பிரமணியன், திருநாவுக்கரசு, உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
AGM கணேசன்
