எரிவாயு முகவர்கள் மட்டும் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் .!
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற எரிவாயு முகவர்கள் மற்றும் நுகர்வோர் கூட்டத்தில் மக்களுக்கு இடையூறாக இயங்கி வரும் எரிவாயு குடோனை இடம் மாற்றம் செய்ய வேண்டும், சமூக நுகர்வோர் பாதுகாப்பு நல சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் சந்திரமோகன் வலியுறுத்தல்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் உத்தரவுபடி எரிவாயு முகவர்கள் மட்டும் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட வழங்கல் அலுவலர் திருமதி கீதாராணி தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு மாவட்ட வழங்கல் அலுவரின் நேர்முக உதவியாளர் மோகன், பறக்கும் படை வட்டாச்சியர் விஜயகுமார், உணவு பொருள் கடத்தல் குற்றப்பிரிவு ஆய்வாளர் திலகா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் இந்த கூட்டத்திற்கு சமூக நுகர்வோர் பாதுகாப்பு நலச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் சந்திரமோகன் கலந்து கொண்டு பேசும்போது.....
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது, அந்த கோரிக்கைகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், இருசக்கர வாகனங்களில் சிலிண்டர்கள் எடுத்து செல்வதை தடுக்கப்பட வேண்டும்
மேலும் பள்ளி,கல்லூரிகளில் மட்டுமின்றி, அரசு அலுவலகங்களிலும்
சமையல் எரிவாயு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், ஏற்கனவே பல முறை கிட்டம்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் எரிவாயு குடேனை வேறு இடத்திற்கு மாற்றப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தும், இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை ஆகையால் பெரும் விபத்து ஏற்படும் முன் இந்த குடோனை வேறு இடத்திற்கு மாற்றிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்த கூட்டத்தில் நுகர்வோர் அமைப்பு சார்ந்த பிரேமலதா உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ