முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா வின் நினைவு சமாதியை உடைத்து ஏரியில் வீசியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிமுக வினர் கோரிக்கை. !

கிருஷ்ணகிரி

முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா வின் நினைவு சமாதியை உடைத்து ஏரியில் வீசியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிமுக வினர் கோரிக்கை. !

கிருஷ்ணகிரி அருகே  முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா வின் நினைவு சமாதியை உடைத்து ஏரியில் வீசியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ள்ளனர்.

தமிழக முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் 
கடந்த 2008 -ல் உடல் நலக்குறைவால் இறந்துப் போனதை அடுத்து அவரின் நினைவாக கிருஷ்ணகிரி அருகே உள்ள சின்ன மேலுப்பள்ளி அண்ணா நகரில்  நினைவு சமாதி அமைத்து உள்ளனர்.

இந்த நினைவு சமாதியில்  அவரது நினைவு நாள் மற்றும் பிறந்த நாளின் போது  பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி உருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் செல்வி ஜெயலலிதா வின் நினைவு சமாதியை மர்ம நபர்கள் இரவு நேரத்தில் பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அருகில் உள்ள ஏரியில் வீசி விட்டு சென்றுள்ளனர்.

பின்னர் ஏரிக்கரையோரம் இருந்த செல்வி ஜெயலலிதா நினைவு சமாதி  உடைத்து  அருகில் உள்ள ஏரியில் தூக்கி விசப்பட்டதை கண்டு கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து சின்ன மேலுப்பள்ளி கிராம மக்கள் செல்வி ஜெயலலிதாவின் நினைவு சமாதியை உடைத்த மர்ம நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல் நிலையத்தில் புகார் மனுவினைக் கொடுத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து கிராம மக்கள் கூறுகையில் தமிழக முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின் மறைவினை யொட்டி சின்ன மேலுப்பள்ளி கிராமத்தில் நினைவு சமாதி அமைக்கப்பட்டு அவரின் நினைவு நாள் மற்றும் பிறந்த நாளின் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் கடந்த 8 ஆண்டுகளாக வழங்கி வருகிறோம்.

இந்த நிலையயில் செல்வி ஜெயலலிதா அவர்களின் நினைவு சமாதியை உடைத்து ஏரியில் வீசி சென்றுள்ளது. மிகவும் வேதனையாக உள்ளது,
ஆகையால் இந்த நினைவு சமாதியை இடித்தவகள் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்,

முன்னாள் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் நினைவு சமாதி இடித்து ஏரியில் வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.

செய்தியாளர்

மாருதி மனோ